ஆர். செல்வராஜ்
இந்திய திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
"அன்னக்கிளி" செல்வராஜ் என்று அழைக்கப்படும் ஆர். செல்வராஜ் (R. Selvaraj) என்பவர் இந்தியத் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநருமாவார்.[1] இவர் முதன்மையாக தமிழ் திரையுலகிலும், சில தெலுங்குத் திரைப்படத்துறையிலும், கன்னடத் திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாநகரின் வைகை ஆற்றங்கரையில் உள்ள திருவெங்கடபுரம் எனும் ஊரில் (அல்லது சிவகங்கை நகரில்) பிறந்தார் செல்வராஜ். இவர் தாய் சிவகங்கையைச் சார்ந்தவர். தந்தை தூத்துக்குடி நகரைச் சார்ந்தவர்; சுயமரியாதை இயக்கக் குடும்பப் பின்னணி கொண்டவர்.[3]
இவர் தந்தையின் தம்பி ந. சங்கரய்யா (1921-2023)[1], ஒரு புகழ்பெற்ற இந்திய விடுதலைப் போராளியும், மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலாளரும் ஆவார்.
இவரது மகன் தினேஷ் செல்வராஜும் ஒரு திரைப்பட இயக்குநராவார். அவர் துப்பாக்கி முனை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[4]
Remove ads
திரைப்படவியல்
இவரது மிகவும் பிரபலமான படம் அன்னக்கிளி ஆகும்.[5] செல்வராஜ் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளியான அகல் விளக்கு படத்தின் மூலம் விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. செல்வராஜ் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
கதை
- எங்கம்மா சபதம் - 1974
- அம்மயில சபதம் - 1975 (தெலுங்கு)
- அன்னக்கிளி - 1976
- கவிக்குயில் - 1977
- கிழக்கே போகும் ரயில் - 1978
- புதிய வார்ப்புகள் - 1979
- தூர்பு வெல்லே ரயிலு - 1979
- கொத்த ஜீவிதாலு - 1980 (தெலுங்கு)
- நன்ன தேவரு - 1982 (கன்னடம்)
- புதுமைப் பெண் - 1984
- இதயகோயில் - 1985
- உதயகீதம் - 1985
- முதல் மரியாதை - 1985
- கீதாஞ்சலி - 1985
- பாடு நிலாவே - 1987
- கொடி பறக்குது - 1988
- சோன் பெ சுஹாகா - 1988 (இந்தி)
- புது நெல்லு புது நாத்து - 1991
- புது மனிதன் - 1991
- சின்ன கவுண்டர் - 1992
- சின்ராயுடு - 1992 (தெலுங்கு)
- கேப்டன் மகள் - 1993
- சக்கரைத் தேவன் - 1993
- கோயில் காளை - 1993
- ராசைய்யா - 1995
- அந்திமந்தாரை - 1996
- மொம்மகா - 1997 (கன்னடம்)
- அக்னி ஐபிஎஸ் - 1997 (கன்னடம்)
- அழகர்சாமி - 1999
- தாஜ்மகால் - 1999
- அலைபாயுதே - 2000
- பொட்டு அம்மன் - 2000
- ஈர நிலம் - 2003
- ரிபெல் - 2015 (கன்னடம்)
இயக்கம்
- பொண்ணு ஊருக்கு புதுசு - 1979
- அகல் விளக்கு - 1979
- பகவதிபுரம் ரயில்வே கேட் - 1983
- நீதானா அந்தக்குயில் - 1986
- சிகப்பு நிறத்தில் சின்னப்பூ - 1990
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads