ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலங்குளம் (Alangulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலைப் பேரூராட்சி ஆகும்.[3] இவ்வூர் திருநெல்வேலி தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ளது. ஆலங்குளம் ஊரின் அடையாளமாக இங்கு ஒக்க நின்றான் மலை (மலை ராமர் கோவில்) உள்ளது. ஆலங்குளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5,796 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 20,948 ஆகும்.
அருகமைந்த நகரங்கள்
ஆலங்குளத்திற்கு மிக அருகே அமைந்த திருநெல்வேலி இரயில் நிலையம் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இரயில் சேவை உள்ளது. கிழக்கில் 80 கி.மீ. தொலைவில் துத்துக்குடி விமான நிலையம் கப்பல் போக்குவரத்து உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் முறையே: கிழக்கில் திருநெல்வேலி 30 கி.மீ.; மேற்கில் தென்காசி 24 கி.மீ.; வடக்கில் சங்கரன்கோவில் 48 கி.மீ.; தெற்கில் அம்பாசமுத்திரம் 20 கி.மீ.
Remove ads
போக்குவரத்து
ஆலங்குளம் நகரானது திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஆலங்குளம் வழியாகச் செல்கின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தூத்துக்குடி, சேரன்மகாதேவி, நாகர்கோவில்,
திருச்செந்தூர், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, பாபநாசம், முக்கூடல், அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளுக்கும் நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில புனலூர், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
பேரூராட்சியின் அமைப்பு
12.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 130 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.87°N 77.5°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (416 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தொழில்
ஆலங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads