ஆலிவ் முதுகு நெட்டைக்காலி

From Wikipedia, the free encyclopedia

ஆலிவ் முதுகு நெட்டைக்காலி
Remove ads

ஆலிவ் முதுகு நெட்டைக்காலி (Olive-backed pipit)(ஆந்தசு ஹோட்க்சோனி) என்பது நெட்டைக்காலி (ஆந்தசு) பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குருவி ஆகும்.

விரைவான உண்மைகள் ஆலிவ் முதுகு நெட்டைக்காலி, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

ஆலிவ் முதுகு நெட்டைக்காலி, தெற்கு, வட மத்திய மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஐரோப்பிய ரஷ்யாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இது தென்னாசியா மற்றும் இந்தோனேசியாவிற்குக் குளிர்காலத்தில் நீண்ட தூரப் புலம்பெயரும் பறவையாகும். சில நேரங்களில் இது இந்திய நெட்டைக்காலி அல்லது ஹோட்சன்ஸ் நெட்டைக்காலி என்றும் அழைக்கப்படுகிறது. இது மர நெட்டைக்காலியினை ஒத்திருப்பதன் காரணமாக மலை நெட்டைக்காலி என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், இதன் பின்புறம் அதிக ஆலிவ்-நிறத்துடன் குறைவான கோடுகளுடன் காணப்படுகிறது.

இந்தப் பேரினப் பெயரான ஆந்தசு இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. இது புல்வெளி சிறியப் பறவை என்பதைக் குறிப்பதாக உள்ளது. இதனுடைய சிற்றினப்பெயரானது ஹோட்க்சோனி, இங்கிலாந்து தூதர் மற்றும் சேகரிப்பாளரான பிரையன் ஹொக்டன் ஹோட்க்சனை நினைவுகூருகிறது.[2]

Remove ads

பரவல்

  • கோடைக்காலம்: இமயமலை பாக்கித்தான் மற்றும் இந்தியாவிலிருந்து, மேற்கு நோக்கி நேபாளம் வழியாக, சீனா, வடக்கே கான்சு மாகாணம், மற்றும் கிழக்கு நோக்கி கொரியா வழியாக ஜப்பான், மற்றும் வட மத்திய ஆசியா வழியாக வடகிழக்கு ஐரோப்பா (ஐரோப்பிய உருசியா) வரை. மேற்கு ஐரோப்பாவில் எப்போதாவது ஒரு அரிய அலையாத்தி. கிழக்கு நேபாளத்தில் 4500மீட்டர் வரை இனப்பெருக்கம் செய்கிறது.
  • குளிர்காலம்: ஆசியாவில் தெற்குப் பகுதி முழுவதும், தீபகற்ப இந்தியாவிலிருந்து கிழக்கே தென்கிழக்கு ஆசியா மற்றும் பிலிப்பீன்சு வரை.
  • வாழிடம்: பசுமையான காடுகளில் குளிர்காலத்தில், தோப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் கோடைக் காலத்தில்.
Remove ads

உடலமைப்பும் பழக்கவழக்கமும்

  • அளவு: சுமார் 15 செ. மீ.
  • தோற்றம்: உடலின் மேற்பகுதி அடர் பழுப்பு நிறத்தில் பச்சை கலந்த பழுப்பு நிற கோடுகளுடன். மார்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதி அடர் பழுப்பு நிற கோடுகளுடன் கீழ்ப்பகுதி வெண்மை நிறமுடையது. பாலின வேறுபாடில்லை.[3]
  • பழக்கவழக்கங்கள்: தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படும். நிலத்தில் ஓடி இரை தேடும். தொந்தரவு செய்யப்படும் போது மரங்களுக்குப் பறந்து செல்கின்றது.
  • உணவு: பூச்சிகள், புல் மற்றும் விதைகள்.

கூடு கட்டுதல்

Thumb
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மாவட்டத்தில் குலுவில் உள்ள மைலி தாட்ச் (10000 அடி) இனப்பெருக்க காலத்தில்
  • பருவம்: மே முதல் ஜூலை வரை.
  • கூடு: பாசி மற்றும் புல்லினைக் கொண்டு நிலத்தில் அல்லது கற்பாறையின் கீழ் அமைக்கப்படுகிறது.
  • முட்டை: 3 முதல் 5 வரை. பொதுவாக 4, அடர் பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads