ஆஸ்டிரலாய்டு இனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆஸ்டிரலாய்டு மக்கள் அல்லது ஆஸ்டிரோ-மெலனிசீயர்கள் (Australo-Melanesians (also known as Australasians or Australomelanesoid race or Australoid race) இதுவும் வரலாற்றில் மனித இனத்தை பிரிப்பதில் காலாவதி ஆகிப்போன பழைய மானிடவியல் அறிஞர்களின் கொள்கையாகும். பொதுவாக ஆஸ்டிரலாய்டு மக்கள் மெலனீசியா மற்றும் ஆத்திரேலியாப் பகுதிகளும் வாழும் பூர்வ குடிகள் ஆவார். இவ்வின மக்களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றனர். பல மானிடவியல் அறிஞர்கள் பப்புவா நியூ கினியாவின் பூர்வ குடிகள் மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளையும் மற்றும் பிஜி தீவு, நியூ கலிடோனியா, வனுவாட்டு, சாலமன் தீவுகளில் வாழும் பூர்வ குடிமக்களையும் ஆஸ்டிரலாய்டு இனத்தில் சேர்க்கின்றனர்.[1]இதில் திராவிடர்களையும், சிங்களவர்களையும் எந்த இனத்திலும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18-ஆம் நூற்றாண்டில், காலனியாதிக்க காலத்தில், மானிடவியல் அறிஞர்கள் மனித இனத்தை மூன்றாக அல்லது நான்காக வகைப்படுத்தினர். மஞ்சள் நிறத் தோல் கொண்டவர்களை மங்கோலாய்டுகள் என்றும், வெள்ளை நிறத் தோல் கொண்டவர்களை காகசாய்டுகள் என்றும், கருப்பு நிறத் தோல் கொண்ட நீக்ராய்டுகள் மற்றும் வகைப்படுத்தினர்.[2]மரபியல் அறிவியல் வளர்ச்சியடைந்த பின்னர், அனைத்து வகையான மனிதர்களும் மரபியல் அடிப்படையில் ஒரே மக்கள் என்று கண்டறிந்தனர். 2019-இல் அமெரிக்காவின் உடல் மானுடவியலாளர்கள் சங்கத்தினர்[3]மனித வாழ்வியலின் இயற்கையான அம்சங்களான "இனங்கள்" மீதான நம்பிக்கை மற்றும் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து வெளிப்படும் சமத்துவமின்மை (இனவெறி) கட்டமைப்புகள் மனித அனுபவத்தில் இன்றும் கடந்த காலத்திலும் இனக் கொள்கை மிகவும் சேதப்படுத்தும் கூறுகள் என அறிவித்துள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads