ஆ. இரா. வேங்கடாசலபதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆ. இரா. வேங்கடாசலபதி (A. R. Venkatachalapathy, பிறப்பு: 1967)[1] தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2][3][4][5][6][7][8] 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[9]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ஆ. இரா. வேங்கடாசலபதி புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[1] பாரிசு, கேம்பிரிச்சு, இலண்டன், ஆர்வர்டு ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (2011-12) இந்தியப் படிப்பில் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவைத் தலைவராக இருந்துள்ளார்.[1]
Remove ads
விருதுகள்
- 2021ஆம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது[10]
- 2021-2022ஆம் ஆண்டுகளில் பாரதியார் விருது [11][12]
- கோயம்புத்தூர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் இவருக்கு 2023 ஆண்டிற்கான டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது
- சாகித்திய அகாதமி விருது, 2024 - (திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908)[9]
இவரது நூல்கள்
- பின்னி ஆலை வேலை நிறுத்தம்
- அந்தக் காலத்தில் காப்பி இல்லை
- நாவலும் வாசிப்பும்
- புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
- புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
- In Those Days There Was No Coffee
- பாரதியின் சுயசரிதைகள்
- பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு[13][14]
- சென்றுபோன நாட்கள் - பதிப்பாசிரியர்
- Province of the Book
- இன்று துயர்மிகு வரிகளை நான் எழுதலாம் பாப்லோ நெருடா கவிதைகள் (மொழிபெயர்ப்பாளர்)
- Chennai not Madras
- திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads