இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு

From Wikipedia, the free encyclopedia

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு
Remove ads

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு (ஆங்கிலம்: Japanese-occupied Dutch East Indie அல்லது Japanese East Indies; இந்தோனேசியம்: Pendudukan Jepang di Hindia-Belanda; இடச்சு: Japanse bezetting van Nederlands-Indiëo; சப்பானியம்: Nippon senryō-ka no orandaryōhigashiindo) என்பது இரண்டாம் உலகப் போரில், நவீன இந்தோனேசியாவின் நிலப்பகுதிகளை சப்பானியப் பேரரசு ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு Japanese-occupied Dutch East Indie Pendudukan Jepang di Hindia-Belanda, நிலை ...

மார்ச் 1942 முதல் செப்டம்பர் 1945 வரை, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரையில், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை சப்பானியர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.

Remove ads

பொது

மே 1940-இல், ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்தது (German invasion of the Netherlands); மேலும் இடச்சு கிழக்கு இந்தியத் தீவுகளில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. இடச்சு அதிகாரிகளுக்கும் சப்பானியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கிழக்கிந்தியத் தீவுக்கூட்டத்தில் சப்பானிய சொத்துக்கள் முடக்கப்பட்டன.

7 டிசம்பர் 1941-இல் பேர்ள் துறைமுகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இடச்சுக்காரர்கள் சப்பான் மீது போரை அறிவித்தனர்.

Remove ads

அரச சப்பானிய இராணுவம்

இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் மீதான சப்பானிய படையெடுப்பு 10 சனவரி 1942-இல் தொடங்கியது. அரச சப்பானிய இராணுவம் (Imperial Japanese Army) மூன்று மாதங்களுக்குள் முழு தீவுக் கூட்டத்தையும் கைப்பற்றியது. மார்ச் 8 அன்று இடச்சுக்காரர்கள் சரண் அடைந்தனர்.[1]

தொடக்கத்தில், இந்தோனேசியர்களில் பெரும்பான்மையோர், தங்களை இடச்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து காப்பாற்ற வந்த நண்பர்களாக சப்பானியர்களை வரவேற்றனர். அந்த உணர்வு விரைவில் மாறியது. ஜாவாவில் பொருளாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களில் 4 முதல் 10 மில்லியன் இந்தோனேசியர்கள் கட்டாயத் தொழிலாளர்களாக (Romusha) பணி அமர்த்தப்பட்டனர்.

4 மில்லியன் மக்கள் இறப்பு

200,000 முதல் 500,000 பேர் ஜாவாவிலிருந்து மற்ற இந்தோனேசியத் தீவுகளுக்கும், பர்மா மற்றும் சியாம் வரைக்கும் அனுப்பப்பட்டனர். ஜாவாவிலிருந்து கொண்டு போகப் பட்டவர்களில், 70,000-க்கும் அதிகமானோர் போரில் இருந்து தப்பிப் பிழைக்கவில்லை.[2]

சப்பானிய ஆக்கிரமிப்பின் போது பஞ்சம் மற்றும் கட்டாய உழைப்பின் விளைவாக இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் 4 மில்லியன் மக்கள் இறந்தனர். இதில், சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட 30,000 ஐரோப்பியர்களின் இறப்புகளும் அடங்கும்.[3]

Remove ads

நேச நாட்டுப் படைகள்

1944-1945 இல், நேச நாட்டுப் படைகள் பெரும்பாலும் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் பிரச்சினைகளில் கலந்து கொள்ளவில்லை. மேலும், ஜாவா மற்றும் சுமத்ரா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலும் கலந்து கொள்ளவில்லை.

எனவே, ஆகத்து 1945-இல் சப்பான் சரணடைந்த நேரத்தில் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் பெரும்பகுதி சப்பானியப் பேரரசின் ஆக்கிரமிப்பில்தான் இருந்தது.

சப்பானிய செயல்பாடுகள்

சப்பானியப் படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த சப்பானிய ஆக்கிரமிப்பு; ஆகிய இரு கூறுகளும், இடச்சு குடுமைப்படுத்தப்பட்ட ஆட்சிக்கு ஓர் அடிப்படைச் சவாலாக அமைந்தன; மற்றும் இந்தோனேசிய தேசியப் புரட்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்தன.[4]

இடச்சுக்காரர்களைப் போல் அல்லாமல், அரசியலாக்கத்தில் சப்பானியர்கள் வேறு ஒரு மாற்றுநிலையில் பயணித்தார்கள். இந்தோனேசியாவின் கிராமங்கள் வரை அரசியலாக்கம் இடம்பெற்றது. சப்பானியர்கள் இளம் இந்தோனேசியர்கள் பலருக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கினர்; நிர்வாகப் பயிற்சிகளை வழங்கினர்; தேசியவாத தலைவர்களுக்கு அரசியல் பயிற்சிகளையும் வழங்கினர். இவை அனைத்தும் இடச்சுப் பேரரசுக்கு எதிர்வினை நிலப்பாடாக அறியப்படுகிறது.

இந்தோனேசிய தேசியவாதம்

குடுமைப்படுத்தப்பட்ட இடச்சு ஆட்சியின் சரிவு; மற்றும் இந்தோனேசிய தேசியவாதம் எளிதாக்கப்பட்ட நிலைப்பாடு; ஆகிய இரண்டு கூறுகளும்; இந்தோனேசியாவின் எதிர்காலத்து அரசியல் போக்கையே மாற்றி அமைத்தன. பசிபிக் பகுதியில் சப்பான் சரண் அடைந்த சில நாட்களுக்குள், இந்தோனேசிய விடுதலையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கித் தந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நெதர்லாந்து, இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை மீட்டெடுக்க முயன்றது. அந்த முயற்சியில், மேலும் கசப்பான அரச முறைமை, இராணுவப் போராட்டங்கள்; மற்றும் சமூகப் போராட்டங்கள் ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்தன.

இத்தனைப் போராட்டங்களுக்குப் பின்னர், திசம்பர் 1949-இல், நெதர்லாந்து எனும் ஐரோப்பிய நாடு, இந்தோனேசியா எனும் தென்கிழக்காசிய நாட்டின் இறையாண்மையை அங்கீகரித்தது.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads