இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இதயத்தை திருடாதே என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 14 பிப்ரவரி 2020 முதல் 3 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பிந்து நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமார் நடிக்கின்றார். இந்த தொடரின் முதல் பருவத்தின் கதை கரு கலர்ஸ் மராத்தி தொடரான 'ஜிவ் ஜலா ஏடே பிசா' என்ற தொடரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[2] இத்தொடர் 3 சூலை 2022 அன்று 1097 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை சுருக்கம்
இந்த தொடர் கும்பகோணத்தில் அரசியல் ரீதியாக போட்டிபோடும் இரு அரசியல்வாதிகளான வானவராயன் மற்றும் தாட்சாயிணி. பதவிவெறி ஆட்டத்திற்கு இடையில் மாட்டிக்கொண்ட சிவா மற்றும் சஹானா ஆகிய இருவரின் காதல் கதையை விபரிக்கின்றது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- நவீன் குமார்[3] - சிவா
- எம்.எல்.ஏ-வான தாட்சாயிணி யின் அடியாள். படிக்காத முரடன். ஆனாலும் நல்லவன். சஹானாவின் கணவன். (பருவம் 1)
- சஹானாவின் முன்னாள் கணவன், ஐஸ்வர்யா ஜூனியரின் தந்தை மற்றும் அரசியல்வாதி. (பருவம் 2)
- பிந்து - சஹானா
- நன்கு படித்தவள் கலைகள் பல அறிந்தவள், புத்திசாலி, அழகானவள் மற்றும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரின் மகள். வாழ்க்கையில் பெரும் லட்சியங்களோடு பயணித்துவருகின்றாள். சிவாவின் மனைவி. (பருவம் 1)
- சிவாவின் முன்னாள் மனைவி, ஐஸ்வர்யா ஜூனியரின் தாய் மற்றும் தொழில் அதிபர் . (பருவம் 2)
- ஆலியா - ஐஸ்வர்யா ஜூனியர் (பருவம் 2)
- சஹானா மற்றும் சிவாவின் மகள்
- மௌனிகா தேவி - மித்ரா (பருவம் 2)
Remove ads
பருவம் 1
தாட்சாயினி குடும்பத்தினர்
- நிலானி - தாட்சாயிணி (தொடரில் இறந்துவிட்டார்)
- சிவாவைத் தன் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் அரசியல்வாதி. சிவாவால் கொல்லப்பட்டார்.
- சாம் - சேதுபதி (தொடரில் இறந்துவிட்டார்)
- தாட்சாயினியின் மகன், ஐஸ்வர்யாவின் கணவர். சிவாவால் கொல்லப்பட்டார்.
- ரியா (1-428) → லாவண்யா மாணிக்கம் (428-645) → நித்யா ராஜ் (647-665) - ஐஸ்வர்யா சேதுபதி (தொடரில் இறந்துவிட்டார்)
- சிவாவின் தங்கை, சேதுபதியின் மனைவி. சேதுபதி மற்றும் தாட்சாயினால் கொல்லப்பட்டார்.
- ஜெமினி மணிகண்டன் - வெற்றி (உதவியாளர்)
சிவா குடும்பத்தினர்
- இளவரசன் (1-55) → அசோக் (56-665) - நீலகண்டன் ( சிவாவின் தந்தை)
- சிவ கவிதா → (1-650) → கரோலின் ஹில்டருட் (651-665) - பவானி நீலகண்டன் (சிவாவின் தாய்)
- ஆனந்தன் - கோதண்டபாணி
- நீலகண்டனின் தம்பி, வள்ளியின் கணவன்
- கார்த்திகா - வள்ளி கோதண்டபாணி
- தீபன் - ராம் (வள்ளி மற்றும் கோதண்டபாணியின் மகன்)
- டொமினிக் நிதிஸ் - லட்சுமணன் (வள்ளி மற்றும் கோதண்டபாணியின் மகன்)
சஹானா குடும்பத்தினர்
- இசாக் வர்கீஸ் - சோமசுந்தரம் (சஹானாவின் தந்தை) (பருவம்: 1- 2)
- மீனாட்சி - தேவகி (சஹானாவின் தாய்) (பருவம்: 1- 2)
- கார்த்திக் சசிதரன் - இளங்கோவன் (சஹானாவின் அண்ணன்) (பருவம்: 1- 2)
- ஆதித்திரி தினேஷ் - - (இளங்கோவனின் மனைவி) (பருவம்: 1- 2)
- நஸ்ரியா - கார்த்திகா (பருவம்: 2)
- இளங்கோவனின் மகள்
வானவராயன் கதாபாத்திரங்கள்
- பிர்லா போஸ் - வானவராயன் (தொடரில் இறந்துவிட்டார்)
- முன்னாள் எம்.எல்.ஏ-வும் தாட்சாயினியின் எதிரி. தாட்சாயிணியால் கொல்லப்பட்டார்.
- தேவி தேஜு - மஞ்சுளா வனவராஜன் (மனைவி)
- தீபாபாலு - அமிர்தா (மகள்)
- விஜயா பாட்டி - - (தாய்)
துணைக் கதாபாத்திரம்
- ராஜேஷ் - பரட்டை (சிவாவின் நண்பன்)
- சுந்தர் - கண்ணதாசன்
- விஷ்ணுகாந்த - செல்வம்
- ராகவா சபரி - சுருட்டை (சிவாவின் நண்பன்)
- ஸ்ரீநிதி சுந்தரேஷன் - ரம்யா
- சயீத் அனீஸ் -ராஜ்குமார்
- ஜெய் ஸ்ரீனிவாஸ் குமார் - பார்த்தசாரதி (சஹானாவின் முன்னாள் காதலன்) (தொடரில் இறந்துவிட்டார்)
- நீதுசந்திரன் துரைசாமி .- நிரஞ்சனா (சிவாவின் முன்னாள் காதலி) (தொடரில் இறந்துவிட்டார்)
சிறப்புத் தோற்றம்
- ரோபோ சங்கர்[4]
- ஆர்த்தி
- ராக்ஷசா கோலா - சங்கரி[5]
- சீதாலட்சுமி ஹரிஹரன் - பிரியா
- பப்பு - சரவணன்
- ஆனந்த்ரபீ - மன்மதன்
- ஜீவிதா - மல்லிகா
- சரவண குமார் - தீபக்
- நான்சி ஜெனிபர் - அனிதா
- துர்கா - கீதா
- ஆதவன்
- நிகரிகா ராஜேஷ் - மீரா
- அமித் பார்கவ் - வேலு
- கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
- அஞ்சு
- சஞ்சய் குமார்
- சத்யா ராஜா
- சமீர்
- தர்ஷினி கவுடா
- பாண்டி - ரவிச்சந்திரன்
- அதிர்த்திறி தினேஷ் - தேன்மொழி
Remove ads
பருவம் 2
- ரித்தீஷ் - கார்த்திக்
நேரம் மாற்றம்
இந்த தொடர் பிப்ரவரி 14, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Remove ads
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் கலர்ஸ் தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ்எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பாகிறது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஊட் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads