இந்தியாவின் இடைக்கால அரசு

1946 முதல் 1947 வரை இந்தியாவின் ஆளும் குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவின் இடைக்கால அரசு (Interim Government of India) இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் (Provisional Government of India) என்றும் அழைக்கப்படும், இது செப்டம்பர் 2, 1946 அன்று உருவாக்கப்பட்டது. [1] புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தில் இருந்து , பிரித்தானிய இந்தியாவை சுதந்திரத்திற்கு மாற்ற உதவும் பணியைச் செய்தது. இது 1947 ஆகத்து 15 வரை, இந்தியாவின் சுதந்திரம் (மற்றும் பிரிவினை) மற்றும் பாக்கித்தான் உருவாக்கம் வரை இருந்தது.[2] [3] [4]

விரைவான உண்மைகள் இந்தியாவின் இடைக்கால அரசு, உருவான நாள் ...
Remove ads

உருவாக்கம்

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, பிரித்தானிய அதிகாரிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தனர். நீண்ட காலமாக சுய ஆட்சிக்காக போராடிய இந்திய தேசிய காங்கிரசு , முஸ்லிம் லீக் போலவே, ஒரு அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் பங்கேற்க ஒப்புக்கொண்டது. கிளமென்ட் அட்லீயின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு சுதந்திர இந்தியாவை வழிநடத்தும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்க 1946 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான தூதுக்குழுவை அனுப்பியது.[5]

ஒவ்வொரு மாகாண சட்டமன்றங்களிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நேரடி தேர்தல்கள் அல்ல. இந்த நிகழ்வில், இந்திய தேசிய காங்கிரசு பெரும்பான்மையான இடங்களை வென்றது. கிட்டத்தட்ட 69 சதவிகிதம், பெரும்பான்மை இந்து வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் உள்ளடக்கியது. பிரித்தானிய இந்தியாவின் பதினொரு மாகாணங்களில் எட்டு மாநிலங்களில் காங்கிரசு தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது.

Remove ads

ஆளுநரின் நிர்வாகக் குழு

வைஸ்ராய் நிர்வாக கவுன்சில் இடைக்கால அரசாங்கத்தின் நிர்வாகக் கிளையாக மாறியது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் தலைமையிலான, இது அமைச்சர்களின் குழுவாக மாற்றப்பட்டது, ஒரு பிரதமரின் அதிகாரங்கள் குழுவின் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டது. இது காங்கிரசு தலைவர் ஜவகர்லால் நேரு வகித்த பதவியாகும். சுதந்திரத்துக்குப் பிறகு, ஆகத்து மாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் இந்தியர்களாக இருந்தனர். இந்தியத் தலைமை ஆளுநர், மவுண்ட்பேட்டன் பிரபு ஒரு சடங்கு பதவியை மட்டுமே வகித்தார்.[6] இந்தியத் தளபதியாக இருந்த சர் கிளாட் ஆசின்லெக் சுதந்திரத்திற்குப் பிறகு மாற்றப்பட்டு சர் ராப் லாக்ஹார்ட் நியமிக்கப்பட்டார்.

மூத்த காங்கிரசு தலைவர் வல்லபாய் படேல் குழுவின் இரண்டாவது சக்திவாய்ந்த பதவியை வகித்தார். உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு தலைமை தாங்கினார். [7] சீக்கியத் தலைவர் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பாக இருந்தார். மேலும்,கல்வி மற்றும் கலைத் துறையின் அமைச்சராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நியமிக்கப்பட்டார். [8] முஸ்லிம் காங்கிரசு தலைவர் ஆசப் அலி , இந்திய ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறைக்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதித் தலைவர் ஜெகஜீவன் ராம் தொழிலாளர் துறைக்கு தலைமை தாங்கினார். இராசேந்திர பிரசாத் உணவு மற்றும் வேளாண் துறைக்கும், ஜான் மத்தாய் தொழில்துறை மற்றும் வழங்கல் துறைக்கும் தலைமை தாங்கினார். [8]

இடைக்கால அரசாங்கத்தில் முஸ்லிம் லீக் சேர்ந்தவுடன், இரண்டாவது மிக உயர்ந்த லீக் அரசியல்வாதியான லியாகத் அலிகான் நிதித் துறையின் தலைவரானார். அப்துர் ரப் நிஷ்தார் தபால் மற்றும் விமானத் துறைகளுக்கும் இ. இ. சுந்திரிகர் வணிகத் துறைக்கும் தலைமை தாங்கினார். [8] சட்டத் துறையை வழிநடத்த லீக் ஒரு பட்டியல் சாதி இந்து அரசியல்வாதியான ஜோகேந்திரநாத் மண்டலை பரிந்துரைத்தது. [8]

Remove ads

செயல்பாடுகள்

ஆகத்து 1947 வரை பிரித்தானிய இந்தியா ஐக்கிய இராச்சியத்தின் இறையாண்மையின் கீழ் இருந்தபோதிலும், இடைக்கால அரசாங்கம் அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இராசதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. [9] இதற்கிடையில், இடைக்கால அரசாங்கம் வரையப்பட்ட அரசியலமைப்பு சபை, சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்கும் பணியைத் தொடங்கியது.

இவற்றையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads