பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம் (Central Legislative Assembly), மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919 இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டு, இந்திய ஆட்சி நிர்வாகத்தில் இந்தியப் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் வகையில் மத்திய சட்டமன்றம் நிறுவப்பட்டது.

இதனை இந்தியச் சட்டமன்றம் (Legislative Assembly) என்றும் ஏகாபத்திய சட்டமன்றம் என்றும் அழைப்பர் (Imperial Legislative Assembly). ஈரவை முறைமை கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய சட்டமன்றம், கீழவையாக செயல்பட்டது.
இந்திய மாகாணங்களின் சபை, பிரித்தானிய இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகச் செயல்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்றம் 14 ஆகஸ்டு 1947 அன்று கலைக்கப்பட்டது. இந்திய மத்திய சட்டமன்றத்தின் பணிகளை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் மற்றும் பாகிஸ்தான் அரசியலமைப்பு மன்றங்கள் மேற்கொண்டது.
Remove ads
அமைப்பு
ஈரவை முறைமை கொண்ட பிரித்தானிய இந்திய நாடாளுமன்றத்தின் மாகாண சபை எனப்படும் மேலவையானது, மத்திய சட்டமன்றம் (கீழவை) இயற்றிய சட்ட முன்வடிவுகளை ஆய்வு செய்த பிறகே கீழவை சட்டமாக நிறைவேற்றும். மத்திய சட்டமன்றம் (கீழவை) மற்றும் இந்திய மாகாண சபையின் (மேலவை) அதிகாரங்கள், வைஸ்ராயின் இறுதி முடிவுகளுக்கு உட்பட்டது.[1][2]
மத்திய சட்டமன்றத்திற்கு மும்பை மாகாணம், சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பஞ்சாப் மாகாணாங்களிலிருந்து 145 உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். [3]
நியமன உறுப்பினர்கள்
மத்திய சட்ட மன்றத்திற்கு, அரசு அலுவல் சார்ந்தவர்களையும் அல்லது அலுவல் சாராதவர்களையும், மாகாண சட்டமன்றங்கள் அல்லது இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவால் நேரடியாக நியமிக்கப்படுவர்.
அலுவலர்கள்
26 நியமன உறுப்பினர்களில், மத்திய சட்டமன்றத்தின் 14 உறுப்பினர்கள் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவாலும்; இந்திய மாகாண சபையின் (மேலவை) 12 உறுப்பினர்கள், மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அலுவல் சாரா உறுப்பினர்கள்
15 அலுவல் சாரா உறுப்பினர்களில், ஐந்து உறுப்பினர்களை, இந்தியத் தொழில் & வணிக சபைகள், இந்தியக் கிறிஸ்துவர்கள், தொழிலாளர் அமைப்புகள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மீதமுள்ள பத்து உறுப்பினர்களில், இருவர் வங்காள மாகாணத்திலிருந்தும், பஞ்சாப், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம், சென்னை மாகாணம், பிகார் மற்றும் ஒரிசா மாகாணம், மத்திய மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் தேர்ந்தெடுத்து அனுப்புவர்.
நேரடித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
துவக்கத்தில் இந்தியச் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 142 உறுப்பினர்களில், 101 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும்; 41 உறுப்பினர்கள் நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
101 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 52 உறுப்பினர்கள் பொதுத் தொகுதிகளிலிருந்தும்; 29 முஸ்லீம்கள், 2 சீக்கியர்கள், 7 ஐரோப்பியர்கள், 7 நிலவுடமையாளர்கள் மற்றும் 4 வணிகர்கள் தனித் தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4][5] பின்னர் இந்திய சட்டமன்றத்திற்கு தில்லி, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், அஜ்மீர்-மெர்வாரா பகுதியினருக்கு தலா ஒரு தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டது.
மத்திய சட்டமன்றத் தொகுதிகள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டது.:[6]
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம், இந்திய நாடாளுமன்றத்தின் ஈரவை முறைமை ஒழிக்கப்பட்டது. இந்திய மத்திய சட்டமன்றத்தில் நேரடியாக தேர்ந்தேடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் சுதேச சமஸ்தானங்களின் சார்பில் 125 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இச்சீர்திருத்தங்களின் படி தேர்தல் நடைபெறவில்லை.
Remove ads
நாடாளுமன்றக் கட்டிடம்
12 பிப்ரவரி 1921ல் புதிய இந்திய மத்திய சட்டமன்றக் கட்டிட வளாகத்தின் அடிக்கல் நடப்பட்டு, 18 பிப்ரவரி 1927ல் திறப்பு விழா நடைபெற்றது.
தற்போது செயல்படும் இந்திய நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு மாற்றப்பட்ட மத்திய சட்டமன்ற சபைக் கட்டிடத்திற்கு, நாடாளுமன்ற இல்லம் அல்லது சன்சத் பவன் எனப்பெயரிடப்பட்து.[7][8]
இந்திய மத்திய சட்டமன்றம், இந்திய மாகாண சபை மற்றும் சுதேச சமஸ்தானங்களின் சபைகளை அலுவல் பூர்வமாக, ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் 1921ல் திறந்து வைத்தார். [9]
Remove ads
தேர்தல்கள்
இந்திய மத்திய சட்டமன்றம் மற்றும் இந்திய மாகாண சபைகளுக்கான முதல் தேர்தல் நவம்பர் 1920ல் நடைபெற்றது.
இத்தேர்தலில் மிதவாதிகளுக்கும், இத்தேர்தலை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர் ஆதரவுடன் பலர் போட்டியிட்டனர். இத்தேர்தலிகளில் 14,15,892 வாக்காளர்களில் 1,82,000 வாக்களர்கள் மட்டுமே வாக்களித்தனர். [10]
ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்பப் பெற்றனர். காங்கிரசு கட்சியிலிருந்து ஒரு குழுவினர் சுயாட்சிக் கட்சியை நிறுவி, 1923 மற்றும் 1926களில் நடைபெற்ற தேர்தலில்களில் போட்டியிட்டனர். சுயாட்சிக் கட்சியின் தலைவரான மோதிலால் நேரு, மத்திய சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவரானார்.
1934ல் காங்கிரஸ் கட்சியினர் ஒத்துழையாமை இயக்கத்தை முடித்துக் கொண்டு, 1934ல் நடைபெற்ற ஐந்தாவது மத்திய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். [11]
1945ல் இந்திய மத்திய சட்டமன்றத்திற்கு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகள்
- இந்திய மத்திய சட்டமன்றத்தில், 1926ல் மோதிலால் நேரு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றி, இந்தியாவிற்கு தன்னாட்சி வழங்கும் தீர்மானத்தை முன் வைத்தார். ஆனால் மத்திய சட்டமன்றம் இக்கோரிக்கையை ஏற்கவில்லை.[12]
- 8 ஏப்ரல் 1929ல் இந்தியப் புரட்சியாளர்கள் பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர், பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியெறிந்தனர். இக்குண்டு வீச்சில் சில ஆங்கிலேய அதிகாரிகள் காயமுற்றனர். [13][14]
- 1934ல் காங்கிரஸ் கட்சி, இந்திய மத்திய சட்டமன்றத்தில் முதன்மை எதிர்கட்சி என்ற தகுதி பெற்றது.
- இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 27 பிப்ரவரி 1942 அன்று மத்திய சட்டமன்றத்தில், இரகசியமாக போர் நிலவரம் குறித்து விவாதம் நடைபெற்றது.[15]
Remove ads
மத்திய சட்டமன்றத்தின் தலைவர்கள்
இந்திய மத்திய சட்டமன்றத்திற்கு தலைமை வகிப்பவரை அவைத்தலைவர் (சபாநாயகர்) என்பர். இதன் இறுதி சபாநாயகராக கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் 14 ஆகஸ்டு 1947 முடிய பதவி வகித்தார்.
மேலும் இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் சபாநாயகராகத் தொடர்ந்து பதவி வகித்தார். பின்னர் 1952ல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகராக தொடர்ந்து பதவி வகித்தார். [16]
Remove ads
கலைப்பு
ஆகஸ்டு, 1947ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் நிறுவப்பட்ட பின், இந்திய விடுதலைச் சட்டம், 1947 படி, இந்திய மத்திய சட்டமன்றம், இந்திய மாகாண சபை மற்றும் மாகாணச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads