இந்திய தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தேசிய கால்பந்து அணி (Indian national football team) என்பது இந்தியாவின் தேசிய கால்பந்து அணியாகும். இது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் முறைப்படுத்தப்படுகிறது. இது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பு கூட்டமைப்பாகும். 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள்ளது. ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒரு தொடக்ககால உறுப்பு அமைப்பாக இணைந்தது. இந்திய தேசிய கால்பந்து அணியின் பொற்காலம் 1950-கள் மற்றும் 1960-கள் ஆகும். அக்காலகட்டத்தில் (1950-ல்) கால்பந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. (மற்ற அனைத்து ஆசிய நாடுகளும் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்கவில்லை) ஆயினும் இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. பயணச்செலவுகள், குறைவான பயிற்சி, அணித்தேர்வுக் குழப்பங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகக் கோப்பையைவிட முக்கியமானதாகக் கருதியமை ஆகிய பல காரணங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்காததற்குக் கூறப்படுகின்றன.[3] இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், ஒரு ஆசியக் கோப்பையில் வெள்ளி மற்றும் உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறன் காட்டிய ஆசிய நாடு என்ற சிறப்பு ஆகிய பெருமைகள் இந்திய கால்பந்து அணிக்கு உரித்தாகும்.
Remove ads
மேலும் பார்க்க
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads