1991 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
Remove ads
பின்புலம்
- முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஒற்றுமையில்லாமையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது.
- அதன் முக்கிய அங்கமான ஜனதா தளம் இரண்டாகப் பிளவுற்று சந்திரசேகர் தலைமையில் சமாஜ்வாடி ஜனதா கட்சி உருவானது.
- பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுடுப்பில் வி. பி. சிங் தோற்று ஜனதா அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் பிரதமரானார்.
- பின்பு சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி மற்றும் அத்வானியின் பாரதிய ஜனதா கட்சியும் வெளியிலிருந்து ஆதரவளித்தனர்.
- ஆனால் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி ஆதரவை விலக்கிக் கொண்டதால் சந்திரசேகர் அவரது சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்தது.
- மீண்டும் ஒரு புதிய தேர்தலை சந்தித்திக்க நேரிட்டது.
- இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகியவை தங்கள் கூட்டணி கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
- தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
- இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி. வி. நரசிம்ம ராவ் காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
Remove ads
முடிவுகள்
மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின
கட்சி | % | இடங்கள் |
காங்கிரசு | 35.66 | 244 |
பாஜக | 20.04 | 120 |
ஜனதா தளம் | 11.77 | 59 |
சிபிஎம் | 6.14 | 35 |
சிபிஐ | 2.48 | 14 |
தெலுங்கு தேசம் | 2.96 | 13 |
அதிமுக | 1.61 | 11 |
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 0.53 | 6 |
ஜனதா கட்சி | 3.34 | 5 |
புரட்சிகர சோசலிசக் கட்சி | 0.63 | 5 |
சிவ சேனா | 0.79 | 4 |
ஃபார்வார்டு ப்ளாக் | 0.41 | 3 |
பகுஜன் சமாஜ் கட்சி | 1.8 | 3 |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 0.3 | 2 |
இந்திய காங்கிரசு (சோசலிசம்) | 0.35 | 1 |
அசாம் கன பரிசத் | 0.54 | 1 |
கேரளா காங்கிரசு (மணி) | 0.14 | 1 |
மணிப்பூர் மக்கள் கட்சி | 0.06 | 1 |
நாகாலாந்து மக்கள் குழு | 0.12 | 1 |
சிக்கிம் சங்கராம் பரிசத் | 0.04 | 1 |
அசாம் சிறுபான்மையினர் முன்னணி | 0.07 | 1 |
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் | 0.16 | 1 |
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு | 0.5 | 1 |
அரியானா முன்னேறக் கட்சி | 0.12 | 1 |
ஜனதா தளம் (குஜராத்) | 0.5 | 1 |
சுயெட்சைகள் | 4.01 | 1 |
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads