லால் கிருஷ்ண அத்வானி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
லால் கிருஷ்ண அத்வானி (பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர் ஆவார்.அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
Remove ads
இளமைக் காலம்
சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
Remove ads
அரசியல்
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.[1] கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.[2] இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.[3] ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.
இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.[4]
1980 டிசம்பரில் பாரதீய ஜனதாக் கட்சியை அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து உருவாக்கினார்.பாஜக உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
Remove ads
சுயசரிதை
எனது நாடு எனது வாழ்க்கை (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று அப்துல்கலாம் இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.
ரதயாத்திரைகள்
மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.[5]
- ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.[6]
- ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.[7]
- ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.[8]
- பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாகுமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.[9]
- பாரத சுரக்ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கு நடத்தப்பட்ட யாத்திரை.[10]
- ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.[11]
Remove ads
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads