பி. வி. நரசிம்ம ராவ்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மேனாள் பிரதமர் (1921-2004) From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.[3] இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.[4]இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.[5]
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.
Remove ads
மறைவு
டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads