இந்திரஜா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இந்திரஜா என்ற திரைப் பெயரைக் கொண்டவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்பட்டுள்ளார். இவர் ஒரு சில தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.[2][3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இந்திராஜாவின் உண்மையான பெயர் இராஜத்தி என்பதாகும். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு கருநாடக இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று சகோதரிகளில் மூத்தவர், மற்ற இருவர் பாரதி மற்றும் சோபா என்பவர்களாவர். பள்ளி நாட்களில், இவர் பாடல் மற்றும் நாடக போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பயிற்சிபெற்ற பாரம்பரிய இசைப் பாடகரும், நடனக் கலைஞரான இவர் குச்சிப்புடி நடன வடிவத்தை மாதவபெட்டி மூர்த்தியிடம் கற்றுக்கொண்டார்.[2] இவர் ஒரு பத்திரிகையாளராக ஆகவேண்டுமென்று தயாராகி கொண்டிருந்தார்.[4][5] இவர் தக்க திமி தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
Remove ads
தொழில்
ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் இந்திரஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு இவர் நடித்த முதல் திரைப்படமான ஜந்தர் மந்தர், படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான 'இந்திரஜா' என்பதையே தன் திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பின்னர், எஸ். வி. கிருஷ்ண ரெட்டியின் யமலீலா இவரை உடனடி நட்சத்திரமாக மாற்றியது. இப்படம் ஓராண்டு கடந்தும் ஓடியது.[2] இவர் தடயம் மற்றும் ராஜாவின் பார்வையிலே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமையாததால் தமிழ்த் திரைப்படங்களில் மேலும் முன்னேற முடியவில்லை.
இவர் பல வெற்றிகரமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவற்றில் 1999 ஆண்டில் மோகன்லாலடன் இண்ந்து நடித்த அதிரடி நாடகப் படமான உஸ்த்த், 2002 ஆண்டில் சுரேஷ் கோபியுடன் இணைந்து திகில் குற்றவியல் திரைப்படமான எப்.ஐ.ஆர், 2002 ஆண்டில் மம்மூட்டியுடன் இணைந்து நகைச்சுவை-நாடகப்படமான குரோனிக் பேச்சிலர், 2004 ஆண்டில் ஜெயராமுக்கு ஜோடியாக நகைச்சுவை நாடகப்படமான மயிலாட்டம், 2005 ஆண்டில் கலாபவன் மணியுடன் இணைந்து நடித்த பென் ஜான்சன் போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திருமணத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, பல தெலுங்குத் திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று இவர் திரையுலகத்துக்குத் திரும்பியுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
இந்திரஜா 7 செப்டம்பர் 2005 அன்று நடிகர் முகமது அப்சரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[6]
திரைப்படவியல்
படங்கள்
தொலைக்காட்சி
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads