இந்திரா நூயி

From Wikipedia, the free encyclopedia

இந்திரா நூயி
Remove ads

இந்திரா நூயி (Indra Nooyi பிறப்பு அக்டோபர் 28, 1955) ஓர் இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி மற்றும் பெப்சிகோவின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆவார்.[3][4][5]

விரைவான உண்மைகள் இந்திரா நூயி, பிறப்பு ...

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.[6] 2014 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்தார் [7] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் பட்டியலில் இரண்டாவது சக்திவாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார் [8][9] அமேசான் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையிலும் வாரியங்களிலும் பணியாற்றுகிறார்.[10][11]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

நூயி 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி, இந்தியாவில், தமிழ்நாடு மதராசில் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) பிறந்தார்.[12][13][14] தனது பள்ளிப்படிப்பை தி.நகரில் உள்ள புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார் . [15]

கல்வி

நூயி 1974 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டங்களையும், 1976 இல் கல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[16]

1978 இல், நூயி வணிக மேலண்மைப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு 1980 இல் பொது மற்றும் தனியார் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் [17]

தொழில் வாழ்க்கை

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஜவுளி நிறுவனமான பியர்ட்செல் லிமிடெட் ஆகியவற்றில் தயாரிப்பு மேலாளர் பதவிகளை வகித்தார். யேல் வணிகப் பள்ளியில் கல்வி பயிலும்போது ,கோடைகால உள்ளகப் பயிற்சியை பூஸ் ஆலன் ஹாமில்டனில் முடித்தார்.[17] 1980 இல், பாஸ்டன் ஆலோசனைக் குழுமத்தில் (BCG) உத்தி ஆலோசகராக சேர்ந்தார்,[18] பின்னர் மோட்டோரோலாவில் துணைத் தலைவர் மற்றும் வணிக வியூக வகுப்பாளர் மற்றும் திட்டமிடல் இயக்குநராகப் பணிபுரிந்தார்,[19] அதைத் தொடர்ந்து ஏசியா பிரவுன் பொவேரியில் பணியாற்றினார்.[20]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

ஜனவரி 2008 இல், நூயி அமெரிக்க-இந்திய வணிக குழுமத்தின் (USIBC) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூயி USIBC இன் இயக்குநர்கள் குழுவிற்கு தலைமை தாங்குகிறார், இது அமெரிக்க தொழில்துறையின் குறுக்கு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளைக் கொண்டுள்ளது.[21][22]

2008 இல்,அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் ஆய்வுதவித் தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[23]

2008 இல்,அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் மூலம் பெயரிடப்பட்டார்.[24]

நூயி ஜூலை 2009 இல் குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குழுவினால் [25] சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டில், பிரெண்டன் வுட் இன்டர்நேஷனல் என்ற ஆலோசனை நிறுவனத்தால் "தி டாப்கன் தலைமை நிர்வாக அதிகாரிகளில்" ஒருவராக நூயி கருதப்பட்டார்.[26][27]

பார்ச்சூன் பத்திரிகை 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர தரவரிசையில் நூயிக்கு முதலிடம் அளித்துள்ளது [28][29][30][31]

2008 முதல் 2011 வரையிலான அனைத்து அமெரிக்க நிர்வாகக் குழு ஆய்வில் நிறுவன முதலீட்டாளரின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் நூயி பெயரிடப்பட்டார் [32] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிராஃப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ரோசன் ஃபீல்டு அமெரிக்க வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக முதலிடம் பெற்றார்.[33]

Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads