இமெல்டா மார்க்கோஸ்

From Wikipedia, the free encyclopedia

இமெல்டா மார்க்கோஸ்
Remove ads

இமெல்டா மார்க்கோசு, (Imelda Marcos, சூலை 2, 1929) மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியாவார். ஆயிரத்திற்கும் கூடுதலான காலணி சோடிகளைச் சேகரித்ததற்காக பரவலாக அறியப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகுஇமெல்டா மார்க்கோசு, பிலிப்பீன்சின் முதல் சீமாட்டி ...

இமெல்டா எஃகு பட்டாம்பூச்சி என்றும் இரும்பு பட்டாம்பூச்சி என்றும் அறியப்படுகின்றார்.[1][2] பெனிக்னோ அக்கினோவின் கொலையில் குடியரசுத் தலைவர் மார்கோசின் அரசு பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மணிலா மக்கள் நடத்திய புரட்சியில் மார்க்கோசு அரசு 1986இல் வீழ்த்தப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொரசோன் அக்கினோ, மார்க்கோசு குடும்பத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நாடுகடத்த கிளார்க்கு வான்படைத் தளத்திலிருந்த அமெரிக்கப்படைகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதன்படி மார்க்கோசு குடும்பத்தினர் ஹவாய் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். பெர்டினான்டு இறந்த பிறகு இமெல்டாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் பிலிப்பீன்சு திரும்ப அக்கினோ அனுமதியளித்தார். அவரது மீள்வருகைக்குப் பிறகு அவரது அரசியல் மரபு திரும்பியது. 1995இல் லெய்டியிலிருந்தும் 2010இல் இல்லோகோசு நோர்த்தெயிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Remove ads

காட்சியகம்

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads