இம்மடி ஜெகதேவராயன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இம்மடி ஜெகதேவராயன் சென்னபட்டணத்தை ஆண்ட மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவரின் தந்தை ராணா ஜெகதேவராயன், ஜெகதேவியை தலைநகராக கொண்டு பாராமகால் பகுதியை ஆட்சி செய்தவர்.[2] இவரின் தந்தை ராணா ஜெகதேவராயன் சந்திரகிரி மீது படையெடுத்து வந்த பீசாபூர் சுல்தான் அலி அதில் ஷாவின் படைகளுடன் தீவிரமாக போரிட்டு நாட்டைக்காத்தான். இதன் காரணமாக ஸ்ரீரங்க தேவ ராயன், பாராமகால் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பை ராணா ஜெகதேவராயனுக்கு கி.பி.1578இல் பரிசாக அளித்து, தன் மகளையும் மணமுடித்து தந்தார். தந்தை ராணா ஜெகதேவராயனுக்குப் பிறகு இவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். இவர் பலிஜா சாதியில் விஷ்ணுவர்தன கோத்திரத்தில் பிறந்தவர்.[3] ஏறக்குறைய கி.பி.1589இல் கோல்கொண்டாவின் முகமது குத்ஷா பெனுகொண்டாவின் மீது போர்த் தொடுத்தான். இப்போரில் இவன் வீரப்போர் புரிந்து முற்றுகையை முறியடித்தான். இதற்குப் பரிசாக விஜயநகர மன்னன் வெங்கடபதி ராயன் இவனுக்கு சென்னபட்டனம் ஜாகீரை வழங்கினார்.[4] இவரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் பெங்களூர், மைசூர், இராமநகரம், மண்டியா, ஹாசன், தும்கூர், கோலார் மற்றும் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாராமகால் பகுதியையும் சேர்த்து கருநாடகத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார். இவருக்கு பின் இவரின் வழித்தோன்றல் நான்கைந்து தலைமுறையாக (கி.பி.1578 முதல் 1669 வரை) 91 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இம்மரபின் இறுதி அரசன் கி.பி. 1669 இல் பீசாபூர் சுல்தானின் தளபதியான முஸ்தபா கானுடன் போரிட்டு இறந்தான். இத்துடன் இம்மரபு அழிந்தது. [5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads