இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு

இந்திய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு
Remove ads

திவான் பகதூர் சர் ரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு (Sir Raghupathi Venkataratnam Naidu) (1862 அக்டோபர் 1 - 1939 மே 26) [1] இவர் ஓர் இந்திய சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் இந்தியாவில் ஆந்திராவின் மச்சிலிபட்ணத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அப்பையா நாயுடு சென்னை இராணுவத்தில் சுபேதராக பணியாற்றினார். இவர்களது முன்னோர்கள் சென்னை இராணுவம் மற்றும் கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத்தில் வீரர்களாகப் பணியாற்றினர். இவர் வீரசேலிங்கத்தின் சீடராக இருந்தார். மேலும் "இவருடைய நாளின் மிக சக்திவாய்ந்த சொற்பொழிவாளர்" என்று வர்ணிக்கப்பட்டார்.

Thumb
இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு
Remove ads

சமூக சீர்திருத்தங்கள்

இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு 1862 அக்டோபர் 1 ஆம் தேதி மச்சிலிபட்ணத்தில் ஒரு பிரபலமான தெலகா நாயுடு குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை, ரகுபதி அப்பையா நாயுடு இராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியதால் சந்திரபூரில் வாழ்ந்து வந்தர். இது இவருக்கு இந்தி, உருது, பாரசீக மொழிகளைப் பற்றிய அறிவைப் பெற உதவியது. தனது தந்தை ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டபோது அங்குள்ள நிசாம் உயர்நிலைப் பள்ளியில் தனது தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தியும் பெற்றார்.

இவர் நேர்மையான குடிமக்களாக மக்களைப் பயிற்றுவிப்பதற்காக 1891 இல் சமூக தூய்மை சங்கத்தை நிறுவினார்.[3]

Remove ads

தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை ஒழிப்பு மற்றும் அரிசன மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் பணியாற்றினார்.[4] காக்கிநாடாவில் அரிசன சிறுவர் சிறுமிகளுக்காக ஒரு அனாதை இல்லம் மற்றும் விடுதி ஒன்றை நிறுவினார்.

ஆந்திராவில் "தேவதசி முறையினை" (கோயில்களுக்கு பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மற்றும் காலப்போக்கில் விபச்சாரிகளைப் போலவே நடத்தப்பட்டவர்கள்) ஒழிக்க இவர் பாடுபட்டார். மேலும் இதில் கணிசமான அளவிற்கு வெற்றியும் பெற்றார்.

இவர் விதவை மறுமணங்களை ஊக்குவித்தார். மேலும் பெண்களின் கல்வியையும் ஊக்குவித்தார்.[5]

Remove ads

பிரம்ம சமாஜம்

தீவிர பிரம்மமாக [6] இருந்த இவர் ஆந்திராவில் பிரம்ம இயக்கத்தை ஊக்குவித்தார். பிரம்ம சமாஜம் இவருக்கு "பிரம்மரிஷி" என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.[7]

மேற்கூறிய அனைத்து சமூக சீர்திருத்தங்களும் கந்துகூரி வீரசேலிங்கத்திற்கு அடுத்து இவரை ஆந்திராவின் இரண்டாவது பெரிய சமூக சீர்திருத்தவாதி என்று வர்ணிக்க வழிவகுத்தன.[4] இவர் பிரம்ம சமாஜத்தின் மூவரில் ஒருவராவார். மற்ற இருவர் கந்துகூரி வீரகேலிங்கம் பந்துலு மற்றும் தேசிராஜு பேடா பாபய்யா ஆகியோர்.

கல்விச் சாதனைகள்

ஐதராபாத்தில் தனது மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற பிறகு, சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

கற்பித்தல் வரிசையில் சேர்ந்த இவர், 1889 மற்றும் 1904 க்கு இடையில் சிக்ககந்திராபாத் மெகபூப் கல்லூரியின் முதல்வராகவும், பின்னர் 1905 மற்றும் 1919 க்கு இடையில் காக்கினாடாவின் பிதாபுரம் ராஜா கல்லூரியிலும் பணியாற்றினார்.[8] 1925 ஆம் ஆண்டில் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தரானார். [8] 1928 வரை அந்தப் பதவியில் இருந்தார்.[9] இவருக்கு 1924 இல் பிரிட்டிசு அரசாங்கத்தால் ஒரு வீரத்திருத்தகை கௌரவம் வழங்கப்பட்டது.[10][11]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads