இரண்டாம் சம்பாஜி

கோலாப்பூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் சம்பாஜி (Sambhaji II) (பிறப்பு:1698 - இறப்பு: 18 டிசம்பர் 1760), மராட்டியப் பேரரசர் சிவாஜியின் பேரனும், சத்திரபதி இராஜாராம் - இராஜேஸ்பாய் இணையரின் மகனும் ஆவார் போன்சலே வம்சத்தின் கோலாப்பூர் இராச்சியத்தின் மன்னரும் ஆவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் சம்பாஜி, முன்னையவர் ...

சாகுஜி, இராஜமாதாவான தாராபாயை வீழ்த்திய பின்னர், தாராபாய் கோல்ஹாப்பூரில் அரசை தமது நிறுவி, தம் குழந்தையான இரண்டாம் சிவாஜியின் அரசப்பிரதிநிதியாக 1710 முதல் 1714 முடிய ஆட்சி செய்தார்.

அச்சமயத்தில் தாராபாயின் சக்களத்தியான இராஜேஸ்பாய், தாராபாய்க்கு எதிராக புரட்சி செய்து, கோல்ஹாப்பூர் அரசை கைப்பற்றி, தன் குழந்தையான இரண்டாம் சம்பாஜியை அரியணையில் அமர்த்தி தான் அரசப்பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்.[1]இரண்டாம் சம்பாஜி 1714 முதல் 1760 முடிய கோலாப்பூர் அரசை ஆண்டார்.[2]

இரண்டாம் சிவாஜிக்குப் பின்னர் கோல்ஹாப்பூர் அரசின் அரியணை ஏறிய மூன்றாம் சிவாஜியின் அரசப்பிரதிநிதியாக ஜிஜாபாய் ஆட்சி செலுத்தினார்.

Remove ads

மேற்கோள்கள்

ஊசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads