சத்திரபதி இராஜாராம்
மராட்டிய சத்ரபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திரபதி இராஜாராம் (Rajaram Raje Bhosale) (ஆட்சிக் காலம்:1670 – 1700)[1] சத்ரபதி சிவாஜியின் இளைய மகனும், சம்பாஜியின் ஒன்று விட்ட தம்பியும் ஆவார்.
Remove ads
குடும்பம்
சத்திரபதி இராஜாராமுக்கு தாராபாய் மற்றும் இராஜேஸ்பாய் என இரண்டு மனைவியரும், இரண்டாம் சிவாஜி மற்றும் இரண்டாம் சம்பாஜி என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
முடி சூட்டல்
1689ல் சம்பாஜியின் மறைவிற்குப் பின்னர், ராய்கட் கோட்டையில் 12 மார்ச் 1689 அன்று இராஜாராமிற்கு மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக மகுடம் சூட்டப்பட்டது. சத்திரபதி இராஜாராம், மராத்தியப் பேரரசை காக்க, 11 ஆண்டுகள் தக்காண சுல்தான்கள் மற்றும் முகலாயர்களுடன் போராடினார்.
செஞ்சி முற்றுகை
25 மார்ச் 1689ல் ராய்கட் கோட்டையை முகலாயர்கள் கைப்பற்றியதால், மராத்தியப் பேரரசின் தற்காலிகத் தலைநகரமாக செஞ்சிக் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைகள் செஞ்சி கோட்டையை ஏழாண்டு முற்றுக்கைக்குப் பின், செப்டம்பர், 1698ல் கைப்பற்றியதால், இராஜாராம் வேலூருக்குத் தப்பி ஓடினார். பின்னர் கோலாப்பூரில் உள்ள விசால்கர் கோட்டைக்குச் சென்றார்.[2] "[3] இறுதியாக இராஜாராம், சதாரா கோட்டையை தன் பேரரசின் தலைநகராகக் கொண்டார்.
இறப்பும் வாரிசுரிமை பிணக்குகளும்
சத்திரபதி இராஜாராம் நுரையீரல் நோயால் தமது முப்பதாவது வயதில், 1700ல் புனே பகுதியில் உள்ள சிங்காத் கோட்டையில் மறைந்தார். இவரது மூத்த மனைவி தாராபாய், தன் இளவயது மகன் இரண்டாம் சிவாஜியை மராட்டியப் பேரரசின் சத்திரபதியாக அறிவித்து, தான் இரண்டாம் சிவாஜியின் காப்பாளாராக மராத்தியப் பேரரசை வழிநடத்தினார்.
இந்நிலையில் மறைந்த இராஜாராமின் அண்ணன் சம்பாஜியின் மகனும், பட்டத்து இளவரசருமான சாகுஜி, தில்லி அவுரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியோடி, சதாராவிற்கு வந்தார். சதாராவில் தாராபாய்க்கும், சாகுஜிக்கும் இடையே மராத்தியப் பேரரசின் வாரிசுரிமை குறித்த பிணக்குகள் ஏற்பட்டது. இறுதியில் பேஷ்வாக்களின் ஆலோசனைகளின் படி, சாகுஜிக்கு மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக பட்டம் சூட்டப்பட்டது.[4][5][6]
பின்னர் சத்திரபதி இராஜாராமின் மூத்த மனைவி தாராபாய், தன் மகன் இரண்டாம் சிவாஜிக்காக கோல்ஹாப்பூரில் தனி இராச்சியத்தை நிறுவினார். இராஜாராமின் இரண்டாவது மனைவியான இராஜேஸ்பாய், தன் சக்களத்தி தாரபாயையும், அவரது மகன் இரண்டாம் சிவாஜியை விரட்டி விட்டு, தன் மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக முடிசூட்டினார்.
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads