இராஷ்டிரிய லோக் மோர்ச்சா

From Wikipedia, the free encyclopedia

இராஷ்டிரிய லோக் மோர்ச்சா
Remove ads

இராஷ்டிரிய லோக் மோர்ச்சா (Rashtriya Lok Morcha) என்பது பீகாரைச் சேர்ந்த ஒரு மாநில அரசியல் கட்சியாகும். இது முதலில் ராஷ்டிரிய லோக் ஜனதா தளம் என அழைக்கப்பட்டது. இக்கட்சியை 20 பிப்ரவரி 2023 அன்று உபேந்திர குஷ்வாஹா தொடங்கினார்.[1][2] இக்கட்சி கர்பூரி தாகூரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.[3][4] ஷேக்புராவைச் சேர்ந்த ஜிதேந்திர நாத் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5]

விரைவான உண்மைகள் இராஷ்டிரிய லோக் மோர்ச்சா, சுருக்கக்குறி ...
Remove ads

கட்சியின் வரலாறு

Thumb
இராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் முன்னாள் தலைவரும் இராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவருமான உபேந்திர குஷ்வாகா, மத்திய அமைச்சராக.

உபேந்திர குஷ்வாகா, பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாவார். இவர் 2007-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 2007-ஆம் ஆண்டில் நிதிஷ் குமாருடன் ஏற்றபட்ட மோதலால் இராஷ்டிரிய சமதா கட்சி என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். பிறகு, 2009 -ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். மேலும், உபேந்திர குஷ்வாகாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி 2010-இல் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும், 2013 மார்ச் மாதத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி இராஷ்டிரிய லோக் சமதா கட்சி என்ற அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். இக்கட்சி, 2014 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து நான்கு இடங்களை வென்றது. 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வென்றது. பிறகு 2018-இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பீகார் மாநிலத்தில் மஹாகத்பந்தன் என்று அழைக்கப்படும் பெருங் கூட்டணியில் சேர்ந்தது. இக்கூட்டணியில் இராச்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் இருந்தன. 2019 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்துத் தோல்வியை தழுவியது. பின்னர் இக்கூட்டணியில் இருந்து விலகி 2020-ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி), மஜ்லிஸ் கட்சி போன்ற கட்சிகளுடன் பெரிய ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி என்ற கூட்டணியில் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தது. பிறகு தனது இராஷ்டிரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைத்தார். பிறகு மீண்டும் நிதிஷ் குமார் அவருடன் மனக்கசப்பு ஏற்பட, இராஷ்டிரிய லோக் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். 2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்து தோல்வியைத் தழுவியது. ஆயினும், உபேந்திர குஷ்வாகாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகத்து மாதம் 2024-இல் வழங்கப்பட்டது.

Remove ads

தேர்தல் வரலாறு

மக்களவைத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், மக்களவை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads