இலக்கணம் (திரைப்படம்)
2006 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலக்கணம் (Ilakkanam) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான சந்திரசேயன் இயக்கினார். இப்படத்தில் புதுமுகம் விஷ்ணு பிரியன், உமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வினு சக்ரவர்த்தி, பாலா சிங், காதல் சுகுமார், சிட்டி பாபு, சத்தியப்பிரியா, அஞ்சலி தேவி, சபிதா ஆனந்த், ரோகினி ராஜஸ்ரீ ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். எம். சி. சண்முகம் தயாரித்த இப்படத்திற்கு, பவதாரிணி இசை அமைத்தார். படமானது 22 திசம்பர் 2006 அன்று வெளியானது. இப்படம் சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை வென்றது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- விஷ்ணு பிரியன் - தமிழரசன்
- உமா - கயல்விழி
- வினு சக்ரவர்த்தி - முருகவேல்
- பாலா சிங் - கயல்விழியின் தந்தை
- காதல் சுகுமார் - இளங்கோ
- சிட்டி பாபு - குமரேசன்
- சத்தியப்பிரியா - தமிழரசனின் தாய் மரகதம்
- அஞ்சலிதேவி - கயல்விழியின் தாய் இலட்சுமி
- சபிதா ஆனந்த் - முருகவேலின் மனைவி
- ரோகிணி - சுசி
- ராஜஸ்ரீ - தமிழசரசின் சகோதரி மல்லிகா
- தாரிகா - கயல்விழியின் சகோதரி சுமதி
- ரேவதி பிரியா - தமிழரசனின் முறைப்பெண்
- திவ்யா நாகேஸ் - பனிமலர்
- எம். சி. சண்முகம் - தமிழசரனின் தந்தை
- உசா எலிசபெத் - இளங்கோவின் மனைவி
- தாடி பாலாஜி - எழில்
- விஜய் ஆனந்த் - மணிமாறன்
- கோவை பாலு - செழியன்
- நெல்லை சிவா - வீட்டுத் தரகர்
- பிர்லா போஸ் - தமிழரசனின் சகோதரர்
- ராஜசேகர் (நடிகர்)
- விஜய் கிருஷ்ணராஜ் - மருத்துவர்
- கிரேன் மனோகர் - ஆறுமுகம்
- திருப்பூர் இராமசாமி
- மும்தாஜ் பக்கோடா காதர்
- போண்டா மணி - பியூனாக
- காடுவெட்டி குரு - தமிழரசனின் உறவினர் குணசேகரன்
- சுப. வீரபாண்டியன் - அவராகவே
- பழ. நெடுமாறன் - அவராகவே
- தென்கச்சி கோ. சுவாமிநாதன் - அவராகவே
- ச. இராமதாசு - அவராகவே
Remove ads
தயாரிப்பு
விஷ்ணுபிரியன் என்ற திரைப்பெயரோடு ராம் என்ற புதுமுகமும் நாயகராகவும், உமா நாயகிதாகவும் இப்படதில் நடிக்க ஒப்பந்தமாயினர்.[4][5] படம் வெளிவருவதற்கு முன்பு, திரைப்படத் தயாரிப்பாளர் எம். சி. சண்முகமும், இயக்குநர் சந்திரசேயனும் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். அவர் படத்தை ரசித்ததாகவும், பவதாரிணியின் இசையால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.[6]
Remove ads
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பவதாரிணி அமைத்தார். 2006 இல் வெளியான இந்த இசைப்பதிவில், சுப்பிரமணிய பாரதி, பாரதிதாசன், பிறைசூடன், பா. விஜய், சந்திரசேயன் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads