இலங்கையின் மக்கள் தொகையியல்

பால் அமைப்பு விகிதாசாரம் From Wikipedia, the free encyclopedia

இலங்கையின் மக்கள் தொகையியல்
Remove ads

இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாசாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

விரைவான உண்மைகள் {{{place}}}-இன் மக்கள் தொகையியல், மக்கள் தொகை ...
Remove ads

மக்கள் தொகை

இலங்கையின் மக்கள்தொகை 20 மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக வரும் நாடாகயிருந்த போதும் அது வளர்ந்த நாடுகளை மிஞ்சும் அளவிற்கு அதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கைச் சுட்டெண்ணை கொண்டுள்ளது.

இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையை காட்டுகின்றது.

தேசிய இனங்கள்

இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் சிங்களவர் [%], இலங்கைத் தமிழர் [%] ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, சிங்களவர் ...
Remove ads

தேசிய சமயங்கள்

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70.19%), இந்து சமயம் (12.61%), இஸ்லாம் (9.71%) கிறிஸ்தவம் (7.45%) (கத்தோலிக்க திருச்சபை 6%, சீர்திருத்தத் திருச்சபையினர் 1%) ஆகவும் உள்ளது. சிங்களவர் பெரும்பாலாக தேரவாத பௌத்ததை பின்பற்றுவதுடன், தமிழர் பெரும்பாலாக இந்து சமயிகளாக உள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் பௌத்தர் [70%], இந்துக்கள் [15%] ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பௌத்தம் ...

தேசிய மொழிகள்

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும், ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பாண்மையாக பயன்பாட்டிலுள்ளது. 1987மாம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முலம் தமிழும், சிங்களமும் அரசு கரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பரவலாக இலங்கையில் உபயோகத்திலுள்ள போதிலும், பறங்கியர் மட்டுமே இதை தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.

Remove ads

சமூக கட்டமைப்பு

சாதிய அமைப்பே இலங்கையின் சமூக கட்டமைப்பின் சமூக அதிகார படிநிலையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டபொதும் நாட்டின் அரசியலிலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

Remove ads

இலங்கையின் கருவளம்

பொதுவாக கருவளம் என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளன. அந்த அடிப்படையில். Hazel R. Barath (1992) என்பவரின் '“Population Geography”' என்ற நூலில் “பொதுவாக கருவளம் என்றபதம் சகல உயிர்வாழ் இனங்களும் தம்மை ஒத்த உயிர்களை தாங்கி அவற்றை பிரசவிக்கின்ற திறமை. குறிப்பாக உயிருடன் நிகழ்கிகன்ற பிறப்புக்களின் உண்மைச் சம்பவம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே தோம்ஸன் மற்றும் லூயிஸ் என்ற அறிஞர்கள் “பொதுவாக ஒருதொகுதிப் பெண்களினது உண்மையான மீள் இனப்பெருக்க நிறைவேற்றத்தினைக் குறித்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கையின் கருவள நிலை

வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளில் தெற்காசியாக் கருவளப் போக்கு சற்று வித்தியாசமானது அதிலும் இலங்கை சமூகக்குறிகாட்டிகள் பலவற்றில் விதிவிளக்குகளைக் கொண்டநாடாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக இலங்கையின் 2006 ஆம் ஆண்டு தரவுகளின் படி எழுத்தறிவு வீதம் 97% பருமட்டான பிறப்பு வீதம் 11% பருமட்டான இறப்பு வீதம் 6% இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1% எனவே இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து விலகியதொரு போக்கை கொண்டு காணப்படுகின்றது எனலாம். அதேவேளை இலங்கையின் கருவளப்போக்கு ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சிப் போக்கை காட்டி நிற்கின்றது. குறிப்பாக 1950களின் பிற்பாடு இதனை சிறப்பாக அவதானிக்கலாம். 1963ஆம் ஆண்டில் பெண் ஒருவருக்கு 5 பிறப்புகள் காணப்பட்டது. (De Silva W 1991) மொத்தக் கருவளவீதம் 1993ஆம் ஆண்டு 2.3 ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 1993) இதனைத் தொடர்ந்து 1995-2000 காலப்பகுதியில் 1.96ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 2000) 2006 ஆம் ஆண்டிலும் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற விகிதத்திலே காணப்பட்டுள்ளது.(World Population Chart Sheet 2006) இலங்கையின் குடிக்கணிப்பானது முதன்முதலில் 1871 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு வரை ஒரு சிலகாலப்பகுதிகள் தவிர ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடிக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கையில் முதன்முதலாக கருவள அளவீடானது 1975 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. (Srilanka Fertility Survery 1975). எனவே கடந்த 3 தசாப்தமாக கருவளம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால் இலங்கையின் கருவளப்போக்கின் வரலாற்றை அணுகக்கூடியதாக இருக்கின்றது.இந்தஅடிப்படையில் இலங்கையின் கருவள அளவீடுகளில் சிறந்த முறையான மொத்தக் கருவள வீதத்தை நோக்கின் 1953 ஆம் ஆண்டு தொடக்கம் 2005-2006 காலப்பகுதி வரையான கருவள வீழ்ச்சிப் போக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இலங்கையின் மொத்தக் கருவள வீதம்

வருடம் மொத்தக் கருவள வீதம்

(1953 – 2005 to 2006)

மேலதிகத் தகவல்கள் வருடம், மொத்தக் கருவள வீதம் ...

மூலம்: Department of census and statistics 2002 World population data sheet 2006


மேலும் இந்த அட்டவணை மொத்தக்கருவளப் போக்கில் படிப்படியான ஒரு வீழ்ச்சிப் போக்கை காட்டி வந்துள்ளது. இன்றைய நிலையில் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற நிலையில் இலங்கையின் மொத்தக் கருவளம் காணப்படுகின்றது. இதே போனறு பருமட்டான முறையில் கருவள வீதத்தை எடுத்து நோக்கும் போது கருவளத்தின் போக்கு எவ்வாறு 1964-2006 வரையான காலப்பகுதியில் மாற்றம் பெற்றுள்ளது என்பதை நோக்கலாம். இதனடிப்படையில் பின்வரும் அட்டவணை இதனை தெளிவ படுத்துகின்றது.

பருமட்டான பிறப்பு வீதம் 1000 ற்கு

Thumb

(1964 – 2006)

மேலதிகத் தகவல்கள் வருடம், பருமட்டான பிறப்பு வீதம் 1000 க்கு ...

மூலம்: Registrar Generals Department 2007.


இதன்படி பருமட்டான பிறப்பு வீதமானது 1964 ஆம் ஆண்டிலிருந்து நோக்கும் போது படிப்படியான குறைவைக் காட்டினாலும் 2001 ஆம் ஆண்டிலிருந்து சற்று அதிகரித்த போக்கைக் காட்டி நிற்பதை அவதானிக்கலாம். குறிப்பாக மொத்தக் கருவளவீதம் பருமட்டான பிறப்பு வீதம் என்பனவற்றில் கருவளதிடீர் வீழ்ச்சியையம் சிலகாலம் தளம்பளில் உயர்வையம் காட்டி நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கருவளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஏற்பட்ட தாக்கம் ஆகும். இதன்படி 1955-1975 காலப்பகுதியில் கருவளவீழ்ச்சிக்கான காரணங்களில் தாமதமான திருமணங்கள் பிரதான காரணியாக குறிப்பிடத்தக்கது. (Wright 1968) றைற் என்பவர் குறிப்பிடுகையில் “பெண்களின் திருமண அந்தஸ்து அவர்களின் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன இக்காலப்பகுதியில் கருவள வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சியம் கருவள வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாயிற்று. இலங்கையில் 1953 ஆம் ஆண்டில் குடும்பத்திட்டச்சங்கம் ஆரம்பித்து 1965 ஆம் ஆண்டு வரையில் அதன் நிகழ்ச்சித்திட்டச் செயற்பாடுகள் பெரும்பாலும் நடைமுறையில் இடம் பெறவில்லை. 1965 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 3 கட்டங்களாக விரிவாக்கம் பெற்ற இத்திட்டம் 1968 ஆம் ஆண்டின் போது நாடு முழுவதையம் உள்ளடக்கியதாக வியாபித்தது.

Remove ads

முடிவரை

இந்த அடிப்படையில் கருவளத்தைத் தீர்மானிப்பதில் பெண்களின் தொழில் அந்தஸ்து கல்விமட்டம் வருமானம் கலாசார மதநம்பிக்கை கணவர்மார் கல்வி தொழில் போன்ற காரணிகளும் கருவளத்தில் தாக்கம் செலுத்திAள்ளதை அவதானிக்கலாம். இது தொடர்பாக (Caldwell 1982) கோல்ட்வெல் என்பவர் “விருத்தி அடைந்த கல்வியால் கருவளமட்டம் குறைவடைந்துள்ளது கல்வி அறிவ திருமணவயதை பாதிக்கின்றது”. எனக்குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இந்த அடிப்படையில் இலங்கையின் கருவளத்திலும் இவ்வாறான காரணிகளின் செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனலாம். இலங்கை கருவளக் கட்டுப்பாடு தொடர்பான அழுத்தமான சட்டங்கள் இன்றுவரையில் கொண்டுவர வில்லை என்றாலும் கருவளத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில்கருவளம் ஒரு முறையான மெதுவான வளர்ச்சிப் போக்கை எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும். இதன்படி ஒரு நாட்டின் குடித்தொகை வளங்களை ஒத்துக் காணப்படும் போது அந்நாட்டின் அபிவிருத்திக்கும் அது வழிவகுக்கும் என்பது சந்தேகமில்லை.

Remove ads

உசாத்துணைகள்

  1. Indralal da silva, (2007), Population Study: Based On Srilanka, Deapani (pvt) ltd, Srilanka.
  2. Registrar Generals Department,(2007).
  3. World Population Data sheet, (2006).
  4. Census and Statistics Department,(2002).

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads