இவானொவா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

இவானொவா மாகாணம்
Remove ads

இவானொவா மாகாணம் (Ivanovo Oblast, உருசியம்: Ива́новская о́бласть, இவானோவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 1,061,651 (2010 கணக்கெடுப்பு)[8] இதன் நிருவாக மையம் இவானொவா நகரம் ஆகும். வோல்கா ஆறு இம்மாகாணத்தின் வடக்கு வழியாக செல்கிறது.

விரைவான உண்மைகள் இவானொவா மாகாணம்Ivanovo Oblast, நாடு ...
Remove ads

வரலாறு

இவானொவா தொழிற்துறை மாகாணம் 1929 அக்டோபர் 1 இல் அமைக்கப்பட்டது.[12] 1936 மார்ச் 11 இல் இதன் ஒரு பகுதி இவானொவா மாகாணமாக்கப்பட்டது. மீதிப் பகுதி யாரோசிலாவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.[13]

புவியியல்

இவானொவா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே கொசுத்ரோமா மாகாணம், கிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், தெற்கே விளதீமிர் மாகாணம், மேற்கே யாரோசிலாவ் மாகாணம் ஆகியன உள்ளன.

இம்மாகாணம் நீண்ட குளிர்காகக் காலநிலையையும் (சராசரி வெப்பநிலை -12செ), குறுகிய கோடை காலத்தையும் (சராசரி வெப்பநிலை +18செ) கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2010 கணக்கெடுப்பிஉன் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 1,061,651.[8] இவர்களில் உருசியர்கள் - 95.6%, உக்ரைனியர் - 0.8%, தத்தார்கள் - 0.7%, ஆர்மீனியர்கள் - 0.4%, அசெரிகள் - 0.3%, ஏனையோர் - 2.2%.[14]

சமயம்

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[15][16] 46.5% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 8% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% சிலாவிக் நம்பிக்கை (ரொத்னவெர்கள்) 1% முஸ்லிம்கள். ஆவர் அத்துடன் 28% சமயசார்பற்ரவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 0.5% ஏனைய சமயத்தவர்கள்.[15]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads