ஈரோடு மாவட்டக் காவல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரோடு மாவட்டக் காவல் என்பது தமிழ்நாடு காவல்துறையின் ஈரோடு மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது ஈரோடு மாவட்ட எல்லைகளை தன் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படம் மாவட்டக் காவல்துறை அமைப்பு ஆகும். இதற்கு தலைமையாக இந்திய காவல் பணியின் மூலம் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார்.
இதன் தலைமையகமான காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படுகிறது.
மாநகரக் காவல்
ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு நகரம் 2008 லிருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள போதும், ஈரோடு நகருக்கான மாநகரக் காவல் ஆணையரகம் உருவாக்கும் கருத்துரு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் பரிசீலனையில் உள்ளது.
காவல் உட்கோட்டங்கள்
இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் ஐந்து காவல் உட்கோட்டங்கள் உள்ளன.[1] ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.
- ஈரோடு நகர உட்கோட்டம் (பன்னீர்செல்வம் பூங்கா)
- ஈரோடு புறநகர் (ஊரகம்) உட்கோட்டம் (பெருந்துறை)
- பவானி உட்கோட்டம்
- கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம்
- சத்தியமங்கலம் உட்கோட்டம்
காவல் நிலையங்கள்
ஈரோடு மாவட்டக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads