தேவேந்திர பத்னாவிசு

From Wikipedia, the free encyclopedia

தேவேந்திர பத்னாவிசு
Remove ads

தேவேந்திர கங்காதர பட்னவீஸ் (Devendra Gangadhar Fadnavis, , பிறப்பு 22 சூலை 1970) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.[1].பாரதிய ஜனதா கட்சியின் மகாராட்டிர மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சர் ஆவார்.[2] இவர் 30 சூன் 2022 அன்று முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[3][4]

விரைவான உண்மைகள் தேவேந்திர கங்காதர பட்னவீஸ், 9வது மகாராட்டிர துணை முதலமைச்சர் ...

1990களில் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது; பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் மகாராட்டிரக் கிளையில் வார்டுத் தலைவராக துவங்கினார். தமது 21வது அகவையிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இலும் 1997இலும் தொடர்ந்து வெற்றி பெற்றி நகர்மன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.[5]

1997இல் தமது 27வது அகவையில் நாக்பூர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராட்டிர சட்டப் பேரவையில் 1999 முதல் நாக்பூரிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]

Remove ads

இளமை வாழ்க்கை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads