உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)

உயிரே என்பது ஜனவரி 2, 2020 முதல் மார்ச் 27 2021 வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை From Wikipedia, the free encyclopedia

Remove ads

உயிரே என்பது ஜனவரி 2, 2020 முதல் மார்ச் 27 2021 வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரின் முதல் பருவம் இந்தி மொழித் தொடரான 'சோடி சர்தாரி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆக்கம் ஆகும். இந்த தொடரை பிரபல நடிகை நிரோஷா என்பவர் போஸ் என்டேர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்க, மனிஷா ஜித், அம்ருத், நிரோஷா, சோனா நாயுடு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

விரைவான உண்மைகள் உயிரே, வகை ...
Remove ads

கதை சுருக்கம்

பருவம் 1

இந்த தொடரின் கதை பவித்ரா என்ற இளம் பெண் தனது தாயின் அரசியல் ஆசையால் தன் காதலனைப் பறிகொடுத்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லுகிறாள். இதற்க்கு பிறகு இவளின் வாழ்வில் நடக்கும் போராட்டங்களை எப்படி கடந்துவருகிறாள் என்பதே கதை.

பருவம் 2

தாய் தந்தையை துளைத்த வெண்ணிலா அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார். அதில் ஏற்படும் பல சவால்களும் மற்றும் வாழ்வில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளும் இந்த தொடர் விளக்குகின்றது.

Remove ads

நடிகர்கள்

பருவம் 1

முதன்மை கதாபாத்திரம்

  • மனிஷா ஜித் (1-75) / (130-254) - பவித்ரா செழியன்
    • ஸ்ரீகோபிகா நீலநாத் (76-129)
      • குடும்பத்தின் மீதும் பாசமும் உயிரோடு இல்லாத தன் தந்தையின் சொல்லே வேதவாக்கு என நினைத்து நேர்மையான வழியில் போராடத் துடிக்கும் ஒரு இளம் பெண்.
  • வீரேந்திர சௌத்ரி (1-37) → அம்ருத் (37-254) - செழியன்
    • வேளாண்துறை அமைச்சர் மற்றும் மனைவியை இழந்துவிட்டு 5 வயது குழந்தைக்குத் தகப்பன்.
  • மிகுவல் டேனியல் - நரேன்

பவித்ரா குடும்பத்தினர்

  • சோனா நாயுடு[3] - வீரலட்சுமி (1 − 75) / (130 − 254)
    • சீமா ஜி. நாயர் (76 − 137)
      • நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் திமிர் பிடித்த அரசியல் வாதி, தாய்ச் சொல்லைத் தட்டாத மூன்று சகோதரர்கள்.
  • பெரோஸ் கான்[4] - அருண்பாண்டி
    • வீரலட்சுமியின் மூத்த மகன் மற்றும் பவித்ராவின் அண்ணன், கிருத்திகாவின் கணவன்.
  • பாவாஸ் சயனி - வேல்முருகன்
    • வீரலட்சுமியின் இரண்டாவது மகன்.
  • தமிழ் - பலமுருகன்
    • வீரலட்சுமியின் மூன்றாவது மகன்.
  • யாழினி ராஜன் - கிருத்திகா அருண்பாண்டி
  • ஆகாஷ் தினேஷ் - யாழினி (வேல்முருகனின் மனைவி)
  • சாத்வீக் → அபினவ் - அருண் (கிருத்திகாவின் மகன்)
  • ஜீவா ரவி - பெரிய மாயத்தேவர் (சிறப்புத் தோற்றம் )

செழியன் குடும்பத்தினர்

  • சாய் லதா (1-76) → ரேஷ்மா ரெசு[5] (77 − 254)- சந்திரா (செழியனின் அக்கா)
  • நிரோஷா - கிரியா (செழியனின் அத்தை)
  • ஸ்ரீதர் - சுந்தரபாண்டி (சந்திராவின் கணவர்)

துணை கதாபாத்திரம்

  • கௌரவ் குப்தா - வருண் (1-40)
    • குடிமைப்பணி தேர்வு எழுதுவதற்கான காத்திருக்கும் ஒரு சாதாரண குடுமத்தை சேர்ந்தவன். பவித்ராவை காதலித்தற்காக வீரலட்சுமியால் இருக்கின்றான்.
  • ரேஷ்மா பசுபுலேட்டி[6] - வசுந்தரா தேவி

பருவம் 2

முதன்மை கதாபாத்திரம்

  • குஷி சம்பத்குமார் - வெண்ணிலா (254-335)
    • பவித்தாரா மற்றும் வருணின் மகள்.
  • ஆனந்த் செல்வன்
Remove ads

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரின் கதையின் நாயகியாக மனிஷா ஜித்[7][8] நடிக்கின்றார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 2015 இல் விந்தை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாயும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் மற்றும் நடிகை நமிதாவின் கணவன் வீரேந்திர சௌத்ரி[9] என்பவர் அத்தியாயம் 1 முதல் 37 வரை செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது அவளும் நானும், தாழம்பூ போன்ற தொடர்களின் நடித்த அம்ருத் என்பவர் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[10] பவித்ராவின் காதலனாக புதுமுக நடிகர் கௌரவ் குப்தா என்பவர் வருண் என்ற கதாபாத்திரத்திலும், தாய் கதாபாத்திரத்தில் மலையாள தொலைக்காட்சி நடிகை சோனா நாயுடு என்பவர் வீரலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றார். தமிழ் நடிகை நிரோஷா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[11]

நேரம் மாற்றம்

இந்த தொடர் சனவரி 2, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, சனவரி 4, 2021 முதல் புதிய நேரத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads