உரிமைக்குரல்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

உரிமைக்குரல்
Remove ads

உரிமைக்குரல் (Urimaikural) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, அஞ்சலிதேவி, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1974 நவம்பர் 7 அன்று வெளியாகி ஒரு வெள்ளி விழாக் கண்ட வெற்றிப்படமாக ஆனது.

விரைவான உண்மைகள் உரிமைக்குரல், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

தயாரிப்பு

இப்படம் எடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் அன்று சிந்திய ரதம் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டு, எம். ஜி. ராமச்சந்திரனைக் கொண்டு சில காட்சிகளை எடுத்தார். பின்னர் அந்தப் படம் நின்றுபோனது. ஸ்ரீதரின் கூற்றுப்படி, அப் படத்திலிருந்து இராமச்சந்திரன் பின்வாங்குவதற்கான காரணம் என்னவென்றால், அன்று சிந்திய ரதம் படத்தை எடுக்க திட்டமிட்ட அதே நேரத்தில் ஸ்ரீதர் புதுமுகங்களைக் கொண்டு காதலிக்க நேரமில்லை (1964) என்ற படத்தையும் தயாரித்து இயக்கிநார். அவர் காதலிக்க நேரமில்லை படத்தை வண்ணப் படமாக எடுத்தார். ஆனால் அன்றைய உச்ச நட்சத்திரமான இராமசந்திரனை வைத்து எடுக்கவிருந்த படமான அன்று சிந்திய ரதம் படத்தை கருப்பு வெள்ளை படமாக குறைந்த செலவில் எடுக்க திட்டமிட்டார், இது ராமச்சந்திரனை வருத்தப்படுத்தியிருக்கலாம், இதனால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.[1] தனது முந்தைய திரைப்படமான அலைகள் படத்தின் தோல்வி காரணமாகவும், அவரது மற்றொரு திரைப்படமான வைர நெஞ்சம் படத்திற்கு சிவாஜி கணேசனால் உரிய நேரம் ஒதுக்கு முடியாத நிலை இருந்ததால் அது தாமதமாகிவந்தது, இதனால் ஸ்ரீதர் நிதி நொருக்கடியில் தவித்தார்.[2] தனது நண்பரான இந்தி நடிகர் இராஜேந்திர குமாரின் ஆலோசனையின் படி, [2] இராமச்சந்திரனை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார். அதற்கு இராமசந்திரனும் ஒப்புக் கொண்டார்.[3][4]

தெலுங்கு திரைப்படமான தசரா புல்லோடு (1971) என்ற படத்தின் பாதிப்பில் உரிமைக் குரல் எடுக்கபட்டதாக ஸ்ரீதர் கூறினார்; அவர் அந்த படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டுமே எடுத்து தமிழ் பதிப்பிற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்தார்.[5] கோபு அப்படத்தைப் பார்த்தபோது, சிவாஜி கணேசனுக்கு இந்தப் படத்தை உருவாக்குமாறு ​​ஸ்ரீதருக்கு பரிந்துரைத்தார், இருப்பினும் இந்தப் படத்தை இராமச்சந்திரனைக் கொண்டு எடுக்கவிருப்பதாக ஸ்ரீதர் கூறியபோது கோபு அதிர்ச்சியடைந்தார். தனது முதல் இயக்கமான காசேதான் கடவுளடாவின் (1972) வெற்றியின் பின்னர் பல படங்களை இயக்கும் வாய்ப்புகளைப் பெற்ற கோபு, திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த விரும்பினார், இது இருவரையும் தொழில் ரீதியாக பிரிய வழிவகுத்தது, ஆனால் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர்.[6] படத்திற்கான ஒளிப்பதிவை என். பாலகிருஷ்ணன் மேற்கொண்டார்; இருப்பினும், படத்தின் உச்சகட்டக் காட்சிகள் தம்புவால் படமாக்கப்பட்டன, ஏனெனில் பாலகிருஷ்ணன் மற்றொரு படத்திற்கான உச்சகட்டக் காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது.[7] இந்த படம் பெரும்பாலும் இராமச்சந்திரனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகிலுள்ள முகலிவாக்கம் கிராமத்தில் படமாக்கப்பட்டது. அதே நேரத்தில் உச்சகட்டக் காட்சிகளை பகுதிகள் நடிகர்-தயாரிப்பாளர் கே. பாலாஜிக்கு சொந்தமான நிலத்தில் படமாக்கப்பட்டது. பாடல்கள் மைசூரில் படமாக்கப்பட்டன.[8][9]

Remove ads

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[10][11] "விழியே கதை எழுது" பாடல் காம்போதி இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[12] இந்த பாடலும் "ஆம்பளைங்களா" பாடலும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. இராமச்சந்திரனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் அரசியல் பிரச்சினைகள் இருந்த நிலையில் கண்ணதாசனால் எழுதப்பட்ட பாடல்கள் ஸ்ரீதரால் சேர்க்கப்பட்டன.[5] ஆனால் ஸ்ரீதருக்கு இராமச்சந்திரன் இதை ஏற்றுக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது.[13] ஆகவே, ஸ்ரீதரும் விஸ்வநாதனும் கண்ணதாசனின் பாடலுக்காக இராமச்சந்திரனை சமாதானப்படுத்த முடிவு செய்தனர், மேலும் பாடலாசிரியர் மீது தனிப்பட்ட வெறுப்பைக் காட்டாமல் இராமச்சந்திரனும் அவர் எழுதிய பாடல்களையே பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னார்.[14][15]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள் பட்டியல், # ...

வெளியீடும் வரவேற்பும்

ஆனந்த விகடன் படத்தை சாதகமாக விமர்சனம் செய்தது. குறிப்பாக அதன் வேகத்தையும், இறுதிக்கட்டக் காட்சியையும் பாராட்டியது.[16] படம் ஒரு வெள்ளி விழா கண்டு வெற்றிப்படமாக ஆனது.[17]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads