ஊர்-நம்மு

சுமேரிய அரசர் From Wikipedia, the free encyclopedia

ஊர்-நம்மு
Remove ads

ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047- கிமு 2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவியவரும், ஊர் நகர அரசை 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய ஊரின் சிகூரட் கோயில் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் ஊர்-நம்மு, புது சுமேரியப் பேரரசு ...
Thumb
மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு கட்டிய சந்திர தேவதைக்கான கோயில்
Thumb
சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்

மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, ஊர் நகர அரசை கட்டி எழுப்பியது மற்றும் ஊரின் சிகூரட் கோயில் நிறுவியதே[1][2][3] இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.

Remove ads

ஆட்சிக்காலம்

Thumb
மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், நிப்பூர்

மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவிய மன்னர் ஊர்-நம்மு மெசொப்பொத்தேமியாவின் லகாசு, உரூக், நிப்பூர், எரிது, கிஷ், லார்சா நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.

மன்னர் ஊர்-நம்மு, ஊர் நகரத்தில் சுமேரிய கடவுள்களுக்காக பல உயர்ந்த கோயில்களை நிறுவினார்[4]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads