எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்

எகிப்தின் பழங்கால வரலாற்றுக் காலம் From Wikipedia, the free encyclopedia

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
Remove ads

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் (Second Intermediate Period of Egypt) (கிமு 1650 - கிமு 1580) இரண்டாம் இடைநிலைக் காலம் என்பது பண்டைய எகிப்தை வெளிநாட்டு குறிப்பாக பண்டைய அண்மை கிழக்கின் ஐக்சோஸ் மக்கள் கிமு 1650 முதல் கிமு 1550 முடிய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த காலமாகும். இது பண்டைய எகிப்தின் வரலாற்றில் எகிப்தின் மத்திய கால இராச்சியத்தின் இறுதிக் காலத்திற்கும், புது எகிப்திய இராச்சியத்தின் துவக்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்து இரண்டாம் முறையாக வெளிநாட்டு மக்களால் சீர்குலைந்த காலப்பகுதியைக் குறிக்கிறது.[1][2]

விரைவான உண்மைகள் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம், தலைநகரம் ...

எகிப்தின் இந்த இரண்டாம் இடைநிலைக் காலத்தில் பண்டைய அண்மைக் கிழக்கில் வாழ்ந்த பிலிஸ்தியர்கள் எனும் ஐக்சோஸ்[3] இன மக்களின் தலைவர் சாலிடிஸ் என்பவர் மேல் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றி, எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தை நிறுவினார்.

எகிப்தின் இடைநிலைக்காலத்தின் போது எகிப்தின் பதினைந்தாம் வம்சம், எகிப்தின் பதினாறாம் வம்சம் மற்றும் பதினேழாம் வம்ச மன்னர்கள் எகிப்தை ஆட்சி செய்தனர்.

Remove ads

வரலாறு

எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் முடிவு

எகிப்தின் 12-ஆம் வம்சத்தின் ஆட்சி, கிமு 19-ஆம் நூற்றாண்டில் வாரிசு அற்ற இராணி சோபெக்னெபெருவின் (கிமு 1806–1802) இறப்புடன் முடிவிற்கு வந்தது.[4] இதன் பின்னர் எகிப்தை ஆண்ட பதிமூன்றாம் வம்ச ஆட்சியினர் கீழ் எகிப்தின் தீபை நகரத்தில் தங்களது தலைநகரத்தை அமைத்துக் கொண்டனர்.

பதிமூன்றாவது வம்சத்தினர் முழு எகிப்தையும் நேரடியாக தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர இயலவில்லை. நைல் ஆற்றின் வடிநிலப் பகுதியின் கிழக்கில் பண்டைய அண்மை கிழக்கின் செமிடிக் மொழி பேசிய அமோரிட்டு மக்கள் கீழ் எகிப்தையும் ஆண்ட பதின்மூன்றாம் வம்சத்தினரை வென்று ஆவரிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு, பதிநான்காம் வம்சத்தை நிறுவி ஆண்டனர்.[4] இவர்கள் 75 ஆண்டுகள் நைல் நதியின் வடிநிலப் பகுதியான கீழ் எகிப்தை ஆண்டனர்.

Remove ads

ஐக்சோஸ் இன மக்களின் ஆட்சி

எகிப்தின் பதினைந்தாம் வம்சம்

பண்டைய எகிப்தை கிமு 1650 முதல் 1550 முடிய பதினைந்தாம் வம்ச ஆட்சியாளர்கள் ஆண்டனர்.[5] இப்பதினைந்தாம் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ்வருமாறு:[5]

பண்டைய எகிப்தை ஆண்ட வெளிநாட்வர்களான எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தின் முதல் ஆட்சியாளர் ஹைக்சோஸ் மேல் எகிப்தின் ஆவரீஸ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தார். இவரால் முழு எகிப்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர இயலவில்லை. இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுதி ஆவார்.[6] (line X.21 of the cited web link clearly provides this summary for the dynasty: "6 kings functioning 100+X years").

தொல்லியல் குறிப்புகளின்படி, இவ்வம்சத்தின் ஆறு பார்வோன்கள் 108 ஆண்டுகள் எகிப்தை ஆண்டனர். இருப்பினும் டேனிஷ் நாட்டின் எகிப்தியவியல் அறிஞர் கிம் ராய்ஹோல்ட்டின் கருத்துப்படி, எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட பதினைந்தாம் வம்சத்தின் மூன்றாவது பார்வோன் அபேபிஸ் எகிப்தை நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆண்டதாக கருதுகிறார்.[7][8]

எகிப்தின் பதினாறாம் வம்சம்

எகிப்தின் பதினாறாம் வம்ச பார்வோன்கள் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை எழுபது ஆண்டுகள் ஆண்டனர்.[4]

Thumb
எகிப்தின் பதினாறாம் வம்ச பார்வோன்களின் தலைநகரம் தீபை மற்றும் அல்-உக்சுர் கோயில்

அபிதோஸ் வம்சம்

இரண்டாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் எகிப்திய அபிதோஸ் வம்சத்தினர் மேல் எகிப்தின் அபிதோஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 1650 முதல் கிமு 1600 வரை ஐம்பது ஆண்டுகளே ஆண்டனர். மேலும் இவ்வம்சத்தினர் எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தினருக்கு சமகாலத்தவர் ஆவார். அபிதோஸ் வம்சத்தின் ஆட்சியாளர்கள்: வெப்வவெட்டம்சப், பண்ட்ஜெனி, நாய்ப்,[9] மற்றும் செனெப் காய் ஆவார்.

அபிதோஸ் வம்ச அரச குடும்பத்தினரின் கல்லறைகள் எகிப்தின் மத்தியகால இராச்சிய மன்னர்களின் கல்லறைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது.

எகிப்தின் பதினேழாம் வம்சம்

வெளிநாட்டு ஐக்சோஸ் இன மக்களிடம் மேல் எகிப்து வீழ்ந்த போது, உள்ளூர் எகிப்திய அரச குடும்ப உறுப்பினர்கள் தீபை நகரத்தில் தங்கள் தன்னாட்சியை நிலைநாட்டி, பின்னர் மேற்காசிய ஐக்சோஸ் மக்களை எகிப்திலிருந்து விரட்டியடித்தனர். இந்த எகிப்திய உள்ளூர் அரச குடும்பத்தினரை 17-ஆம் வம்சத்தினர் என்று அழைத்தனர்.

பதினேழாம் வம்சத்தினர் மேல் எகிப்து முழுவதும் கோயில்கள் பல எழுப்பியும், அமைதியான வணிக உறவையும் நிலைநிறுத்தினர். இவ்வம்சத்தின் இறுதி இரண்டு பார்வோன்களான செக்கனென்ரே தாவோ மற்றும் காமோஸ் ஆகியோர் மேற்காசியாவின் ஐக்சோஸ் இன மக்களை போர்கள் மூலம் எகிப்திலிருந்து விரட்டியடித்தனர். பின்னர் எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் முதல் பார்வோன் முதலாம் அக்மோஸ், ஐக்சோஸ் மக்களை எகிப்திலிருந்து முழுவதுமாக விரட்டியடித்து, கிமு 1580-இல் மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்து புது எகிப்திய இராச்சியத்தை நிறுவினர்.

Remove ads

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads