துரின் மன்னர்கள் பட்டியல்

From Wikipedia, the free encyclopedia

துரின் மன்னர்கள் பட்டியல்
Remove ads

துரின் மன்னர்கள் பட்டியல் (Turin King List), பண்டைய எகிப்தை ஆண்ட பார்வோன்களின் பெயர்ப் பட்டியலை கொண்ட பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகள் ஆகும். துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியல், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் கிமு பதிமூன்றாம் நூற்றான்டில் தயாரிக்கப்பட்டது. [1] [2][3]இந்த துரின் மன்னர்கள் பட்டியல் அடங்கிய சுருள் ஏடுகள் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[4] எகிப்திய பார்வோன் இரண்டாம் சேத்தியின் கோயில் சுவர்களில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர் பட்டியல் செதுக்கப்பட்டுள்ளது.

Thumb
1904-இல் சீராக அடுக்கப்பட்ட துரின் எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள்
Remove ads

துரின் பட்டியலின் விளக்கம்

பாபிரஸ் எனும் காகித்தாலான துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியலில் பண்டைய எகிப்தியக் கடவுள்கள், ஆவிகள் மற்றும் பார்வோன்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பட்டியலில் எகிப்தை ஆண்ட் எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் மற்றும் நூபியா நாட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. இப்பட்டியலில் 19-ஆம் வம்சம் மற்றும் 20-ஆம் வம்ச மன்னர்கள் வரையிலான பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் கிமு 13-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.

Remove ads

துரின் பாபிரஸ் சுருள் ஏடுகளின் உள்ளடக்கம்

பாபிரஸ் எனும் தடித்த காகிதங்கள் 11 பக்க சுருள் ஏடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது.

Thumb
Turin King List with 2013 corrections of positions for some fragments – table representation of rows from the original papyrus, translated into hieroglyphs

11 பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகளில் எழுதப்பட்ட எகிப்தியக் கடவுள்கள், மன்னர்கள் பெயர், ஆட்சிக் காலம் குறித்த தகவல்கள்:

மேலதிகத் தகவல்கள் இரண்டாம் பக்கம், வ எண் ...
  • The Manuel de Codage text was written using the Open Source hieroglyphic editor JSesh.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads