எகிப்தின் எட்டாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய எகிப்தின் எட்டாம் வம்சத்தினர் (Eighth Dynasty -Dynasty VIII) பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2181 முதல் கிமு 2161 முடிய 20 ஆண்டுகள் மட்டுமே, மெம்பிஸ்சை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்சத்தினர் ஆட்சியின் துவக்கத்தில், அரசியல் குழப்பங்களால் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் நிலவத் துவங்கியது. இதனால் பழைய எகிப்து இராச்சியம் முடிவிற்கு வந்ததது. இவ்வம்சத்தவர்களுடன், ஏழாம் வம்சத்தவர்கள் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை தனித்தனியாகப் பிரித்துக் கொண்டு ஒரே நேரத்தில் ஆண்டனர்.
எட்டாம் வம்சத்தவர்கள் ஆட்சியில் பண்டைய எகிப்து இராச்சிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, நொமார்க் (nomarch) எனும் ஆளுநர்களால் ஆளப்பட்டது. இதனால் நிலப்பிரத்துவம் முறை நடைமுறைப்படுத்தப்படது. இதனால் பார்வோன்களுக்கும், அதிகாரம் மிக்க ஆளுநர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஆளுநர்கள் மற்றும் நிலப்பிரபுகளின் கை ஓங்கியது.
எட்டாம் வம்ச பார்வோனை, அதிகாரம் மிக்க கோப்டோஸ் மாகாண அளுநர், கிமு 2161-இல் எட்டாம் வம்ச பார்வோனை அரியணையிலிருந்து விரட்டியடித்து, தான் எகிப்தின் பார்வோனாக முடிசூட்டுக் கொண்டு ஒன்பதாம் வம்சத்தை நிறுவினான்.
Remove ads
எட்டாம் வம்ச ஆடசியாளர்கள்
- நெத்ஜெர்கரே சிப்டா
- மென்கரே
- நெபர்கரே II
- நெபர்கரே நெபி
- ஜெத்கரே செமாய்
- நெபர்கரே கெண்டு
- மெரன்ஹோர்
- நெபர்காமின்
- நிகரே [1]
- நெபெர்கரே டெரெரு
- நெபெர்கஹோர்
- நெபெர்கரே பெபிசெனப் [2]
- நெபர்காமின் அனு
- குவாக்கரே இபி[3]
- நெபெர்கௌரே [3] attested by a decree concerning the temple of Min (god).[4]
- நெபெரௌஹர்[3] attested by eight decrees concerning the temple of Min,[5][6][7] and an inscription in the tomb of vizier Shemay.[8]
- நெபெரிக்கரே
Remove ads
பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686) 1 & 2
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) 3 - 7
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055) 8 -
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads