எக்கோ (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எக்கோ (ஆங்கிலம்: Echo) என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் வெளியான மார்வெல் காமிக்சு கதாபாத்தித்தை அடிப்படையாகக் கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக மரியன் டேயர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் எக்கோ, வகை ...

இந்த தொடர் மார்வெல் இசுடியோசு தயாரிப்பில் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பகுதியாகவும் 2021 ஆம் ஆண்டு வெளியான ஹாக்கி[1] என்ற தொடரின் வழித்தொடரும் ஆகும்.[2]

இது மாயா லோபஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதையும், அங்கு அவர் தனது கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதுடன், தனது பூர்வீக அமெரிக்க குடிகளுடம் மீண்டும் இணைந்திருக்க விருபிக்கிறார், மேலும் அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் அரவணைக்க முயற்சிப்பதே சித்தரிக்கின்றது. இந்த தொடரை சிட்னி பிரீலாண்ட் என்பவர் இயக்க,[3] தலைமை எழுத்தாளராக மரியன் டேயர் என்பவர் பணியாற்றுகிறார். இந்தத் தொடரை 20வது தொலைக்காட்சியும் இணைந்து தயாரித்துள்ளது.

ஹாக்கி தொடரில் இருந்து மீண்டும் நடிகை அலகுவா காக்சு[4][5] என்பவர் மாயா லோபஸ்/எக்கோ என்ற தனது பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இவருடன் இணைந்து சாஸ்கே இசுபென்சர், தாண்டூ கார்டினல், டெவரி ஜேக்கப்சு, கோடி லைட்னிங், கிரகாம் கிரீன், ஜான் மெக்லார்னான், வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ மற்றும் சார்லி சாக்ஸ்[6][7] போன்ற பலர் நடிக்கிறார்கள். இதன் வழித்தொடர் வளர்ச்சி மார்ச் 2021 இல் தொடங்கியது, ஈடன் மற்றும் எமிலி கோஹன் ஆகியோர் தலைமை எழுத்தாளர்களாக இணைக்கப்பட்டனர், மேலும் அலக்வா காக்சு திரும்பி வருவதை உறுதிப்படுத்தினார். நவம்பர் 2021 இல் இந்தத் தொடர் முறையாக அறிவிக்கப்பட்டது, மரியன் டேயர் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றுவது தெரியவந்தது, சிட்னி பிரீலாண்ட் என்பவர் மார்ச் 2022 க்குள் இயக்குநராக உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஏப்ரல் பிற்பகுதியில் தொடங்கியது மற்றும் செப்டம்பர் 2022 வரை நீடித்ததது,

எக்கோ தொடர் டிஸ்னி+[8] குலு போன்ற ஊடகங்களில் சனவரி 9, 2024 அன்று ஐந்து அத்தியாயங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதி ஒரு பகுதியாகும் மற்றும் "மார்வெல் ஸ்பாட்லைட்" பேனரின் கீழ் முதல் தொடராகும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads