எங்க ஊரு பாட்டுக்காரன்
கங்கை அமரன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எங்க ஊரு பாட்டுக்காரன் (enga ooru paattukkaaran) 1987-இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கங்கை அமரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராமராஜன், ரேகா, சாந்திபிரியா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களிலிலும் செந்தாமரை, வினுச்சக்கரவர்தி, செந்தில், கோவை சரளா, எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கல்யாணி முருகன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 14, 1987இல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.[1][2][3][4]
Remove ads
கதைச்சுருக்கம்
செண்பகம் (நிசாந்தினி) பணக்காரரின் (சீமதுரை) மகளாவாள். சீதன் பால்கறக்கும் அனாதை ஆவான். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவ்விருவரும் அவர்களுக்குள் இருக்கும் காதலை நேரடியாக வெளிக்காட்டவில்லை. சீதனை, மருதமுத்து (வினுச்சக்கரவர்தி) வளர்த்து வந்தார். செண்பகத்தின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் போது செண்பகம் தற்கொலை செய்து விடுகிறாள். செண்பகத்தின் மரணத்தை சீதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருதமுத்து சீதனுக்கு காவேரி (ரேகா) எனும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கிறார். சீதன் திருமணம் செய்தாலும் அவனுக்கு செண்பகத்தை மறக்க முடியவில்லை.
Remove ads
நடிகர்கள்
- ராமராஜன் - சீதன்
- ரேகா - காவேரி
- சாந்திப்ரியா - செண்பகம்
- செந்தாமரை - செண்பகம், வடக்கு விநாயகத்தின் தந்தை
- வினு சக்ரவர்த்தி - மருதமுத்து
- செந்தில் - வடக்கு விநாயகம்
- கோவை சரளா - சக்கு
- எஸ். எஸ். சந்திரன் - சக்குவின் தந்தை
- பசி சத்யா - சக்குவின் தாய்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கோபி
- எஸ். என். பார்வதி - செண்பகம், வடக்கு விநாயகத்தின் தாய்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - பஞ்சாயத்துத் தலைவர்
- கருப்பு சுப்பையா
- உசிலைமணி - அறிவுமணி
- மா. நா. நம்பியார் - கள்ளம்பட்டியான் (விருந்தினர் தோற்றம்)
- ஜெய்சங்கர் - மஞ்சம்பட்டியான், சீதனின் தந்தை (விருந்தினர் தோற்றம்)
- சங்கிலி முருகன் - இருளப்பன் (விருந்தினர் தோற்றம்)
- திலீப் - இருளப்பனின் மகன் (விருந்தினர் தோற்றம்)
- கங்கை அமரன் - சிறப்புத் தோற்றம்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.[5][6][7] மனோ அனைத்துப் பாடல்களையும் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads