எச்பிஓ மாக்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எச்பிஓ மாக்சு (ஆங்கிலம்: HBO Max) என்பது வார்னர் புரோஸ். டிஸ்கவரிக்கு சொந்தமான அமெரிக்க நாட்டு சந்தா அடிப்படையிலான கோரிய நேரத்து ஒளித சேவை ஆகும். இந்த சேவை மே 27, 2020 அன்று அமெரிக்காவில், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளிலும் ஜூன் 29, 2021 அன்று அந்தோரா, எசுப்பானியா மற்றும் நோர்டிக் நாடுகளிலும் அக்டோபர் 26, 2021 இல் நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் மார்ச் 8, 2022 அன்று மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும் தொடங்கப்பட்டது.
இது எச்பிஓ என்ற பெயரில் கட்டணத் தொலைக்காட்சிச் சேவையின் உள்ளடக்கத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்படும் போது, எச்பிஓ மாக்சு முக்கியமாக வார்னர் புரோஸ். டிஸ்கவரியின் பல்வேறு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளுக்கான உள்ளடக்க மையமாக செயல்படுகிறது.
2021 இன் இறுதியில் எச்பிஓ மற்றும் எச்பிஓ மாக்சு மொத்தம் 73.8 மில்லியன் செலுத்தும் உலகளாவிய சந்தாதாரர்களைக் கொண்டிருந்தன.[1][2] 2022 இன் இறுதியில் எச்பிஓ மற்றும் எச்பிஓ மாக்சு 76.8 மில்லியன் உலகளாவிய சந்தாதாரர்களைக் கொண்டிருந்தன.[3]
Remove ads
வரலாறு
அக்டோபர் 10, 2018 அன்று வார்னர் மீடியா 2019 இன் பிற்பகுதியில் அதன் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு ஓடிடி தள சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது.[4] இந்த சேவைக்கான அசல் திட்டம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டடு,[5] மே 27, 2020 அன்று அதிகாரப்பூர்வமாக தனது சேவையை ஆரம்பித்தது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads