எபிரேயத் தமிழியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எபிரேயத் தமிழியல் (Hebrew Tamil Studies) என்பது யூதர் மற்றும் எபிரேய மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

மேலதிகத் தகவல்கள் தமிழியல் ...

எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது தனாக் (Tanakh) தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதப்படுகின்றது.[1][2] திருவிவிலியத்தில் (1 அரசர்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான தோகை எனும் உச்சரிப்புசார் துகி என பாவிக்கப்பட்டுள்ளது.[3][4] மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகவுள்ளது.[5][6][7][8] இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[9][10][11] திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாலமோன் கால தர்ஷிஸ் தமிழகத்தின் அல்லது வட ஈழத்தின் குதிரைமலை அல்லது திருக்கேதீச்சரம் எனவும் அறிஞர்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.[12][13]

தமிழில் உள்ள அம்மா, அப்பா என்னும் உச்சரிப்புக்கள் எபிரேயத்தில் முறையே இம்மா (imma), அபா (abba) என பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழிலும் எபிரேயத்திலும் காணப்படும் சொற்களின் அட்டவணை பின்வருமாறு:[14]

மேலதிகத் தகவல்கள் தமிழ்ச் சொல், எபிரேயச் சொல் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

மேலதிக வாசிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads