இபோலா தீநுண்ம நோய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலைக்காய்ச்சல் அல்லது இபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease, EVD) அல்லது இபோலா ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் (Ebola hemorrhagic fever, EHF) என்ற மனிதர்கள் சம்பந்தப்பட்ட நோயானது இபோலா கிருமியினால் உண்டாக்கப்படுகிறது. குறிப்பாக கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் இருந்து மூன்று வாரங்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (Myalgia–muscle pains), மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் அடையாளங்கள் ஆரம்பிக்கின்றன. குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் வாந்தியுணர்வு (nausea) ஆகியவற்றின் செயல்பாடு குறைந்து போனதைத் தொடர்ந்து வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் சிலருக்கு ரத்தக்கசிவு பிரச்சனைகள் துவங்குகின்றன.[1]
இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் (பொதுவாக குரங்கு அல்லது பழம் தின்னும் வௌவால்) ரத்தம் அல்லது உடல் திரவங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு காரணமாக சுவீகரிக்கப்படலாம்.[1] இயற்கையான சுற்றுச்சூழலில், காற்றின் வழியாக பரவுதல் நிரூபிக்கப்படவில்லை .[2] பழம் தின்னும் வௌவால்கள் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமலேயே கிருமியைக் தங்கள் வசம் கொண்டபடி பரப்புவதாக நம்பப்படுகிறது. மனிதர்களுக்குள் தொற்று நேர்ந்தவுடன், நோயானது இதர மக்களிடையே பரவக்கூடும். ஆண்களில் உயிர் பிழைப்பவர்கள் இரண்டு மாதங்களுக்கு விந்து வழியாக நோயைக் கடத்த இயலும். நோய் கண்டறிதலுக்காக முதல் நிலையில் குறிப்பாக மலேரியா, காலரா மற்றும் இதர கிருமிரீதியான ரத்த இழப்பு காய்ச்சல்போன்ற இதனையொத்த அடையாளங்களைக் கொண்ட நோய்கள் விலக்கப்படுகின்றன. நோய் கண்டறிதலை உறுதிப்படுத்த கிருமிரீதியான ஆன்ட்டிபாடீஸ், கிருமிரீதியான ஆர் என் ஏ, அல்லது அந்தக் கிருமிக்காகவே ரத்த மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன.[1]
முன்தடுப்பு என்பதில் தொற்றப்பட்ட குரங்குகள் மற்றும் பன்றிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதைக் குறைப்பது அடங்குகிறது. அவ்வாறான விலங்குகளை சோதித்து, அவற்றில் நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றைக் கொன்று அவற்றின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துவதால் இதனைச் செய்யலாம். மாமிசத்தை முறையாக சமைப்பது மற்றும் அதனைக் கையாளும்போது அந்த நோய் கொண்ட ஒருவரின் அருகாமையில் பாதுகாப்பான உடை அணிவது மற்றும் கைகளைக் கழுவுதல் ,) போலவே பாதுகாப்பான உடையை அணிவதும், உதவிகரமாக இருக்கும். நோய் கொண்ட மக்களிடம் இருந்தான உடல் திரவங்கள் மற்றும் திசுக்களின் மாதிரிகள் சிறப்புக் கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.[1]
நோய்க்கென குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை; பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் முயற்சிகளில் வாய் வழியான நீர் மறு நிறைப்பு சிகிச்சைமுறை (ஓரளவுக்கான இனிப்பும் உப்பும் கலந்த சுவை கொண்ட நீர் குடிக்க வைத்தல்) அல்லது ஊசிவழியாக உட்புகுத்தல் செய்யப்படும் திரவங்கள் ஆகிய இவற்றில் ஒன்றைகொடுப்பது அடங்கும்.[1] இந்த நோயானது மிக உயரிய இறப்பு விகிதம்கொண்டுள்ளது: இந்தக் கிருமியினால் தொற்றப்பட்டவர்களில் 50% லிருந்து 90% வரையான மக்களை நோய் பெரும்பாலும் மாய்த்து விடுகிறது.[1][3] சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுஆகிய நாடுகளில்தான் இ வி டி முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. இந்த நோயானது ஆப்பிரிக்காவின் சஹாரா பாலவனம் ஒட்டிய பகுதியின் உஷ்ணப் பிரதேசங்களில்தான் குறிப்பாக நேருகிறது.[1] 1976 லிருந்து (முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட போதிலிருந்து) 2013 வரையான காலத்தில், 1,000க்கும் சற்று குறைவான மக்களே தொற்றப்பட்டிருந்தனர்.[1][4] இன்றைய தேதிக்கு மிகப்பெரிய பரவலானது, நடப்பிலிருக்கும் 2014 மேற்கு ஆப்பிரிக்க இபோலா பரவல்ஆகும், இது கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் சாத்தியமாகவே நைஜீரியாஆகிய நாடுகளை பாதிக்கிறது.[5][6] ஆகஸ்டு 2014 நிலவரப்படி 1600 நிகழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[7] தடுப்பு மருந்துஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும், இதுவரை ஏதுமில்லை.[1]
Remove ads
கண்டுபிடிப்பாளர்
எபோலா தீநுண்மத்தை 1976இல் பீட்டர் பியட் என்பவர் சயீர் என அப்பொழுது அழைக்கப்பட்ட காங்கோ மக்களாட்சிக் குடியரசில் கண்டுபித்த குழுவில் ஒருவர் ஆவார்.[8] இத் தீ நுண்மத்திற்கு எபோலா என்று அப்பகுதி ஆற்றின் பெயர் வைக்கப்பட்டது.
நோய் பரவல்
இத்தீநுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. எபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்கு, காதுகள் மற்றும் ஆண்/பெண்குறிகளிடமிருந்து குருதி ஒழுகும். இந்த நீர்மங்கள் மற்றவர்கள் நோய் பற்றிக்கொள்ள காரணமாக அமைகின்றன.
Remove ads
நோய் அறிகுறிகள்

ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு. பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு), மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புக்கள் செயலிழக்கத் துவங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.
மருத்துவ சிகிச்சை

இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். மருத்துவமனையில் சிரைவழி நீர்மங்கள், குருதி ஆகியனவற்றைக் கொடுப்பதுடன் குருதி அழுத்தம், சுற்றோட்டத் தொகுதி சீர்மை ஆகியவற்றிற்கான மருந்துகளும் அளிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலர் எபோலா வாய்ப்பட்டால் அதனை தடுக்க மருத்துவர்களும் அரசும் விரைந்து செயல்படுகின்றனர். நோயுற்ற மக்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கின்றனர். நோயாளிகள் வெளியேற்றும் நீர்மங்கள் நோய் பரவாதவாறு கழிக்கப்படுகின்றன.
எபோலா தீ நுண்மத்திற்கான தடுப்பு மருந்து கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.
Remove ads
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads