இம்ரான் மகரூப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இம்ரான் மகரூப் (Imran Maharoof, பிறப்பு: 1 செப்டம்பர் 1983)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் மகரூப் முன்னாள் அமைச்சர் எம். ஈ. எச். மகரூப்பின் மகனும்,[2][3] நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். மகரூப்பின் உறவினரும் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இம்ரான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம், மற்றும் வங்கியியலில் கற்கை நெறிப் பட்டத்தையும் பெற்றவர்.[5] தனியார் வங்கி ஒன்றில் 2004 முதல் 2010 வரை பணியாற்றினார்.
Remove ads
அரசியலில்
மகரூப் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். 19,665 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] பின்னர் அவர் 2012 மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[7]
மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 32,582 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8][9][10] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12]
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads