ஏமி சாக்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏமி லூயிசு சாக்சன் (ஆங்கிலம்: Amy Jackson), பரவலாக ஏமி ஜாக்சன், இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.
சாக்சன் ஒரு நனிசைவ வாழ்க்கை முறையினரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் விலங்குரிமை அமைப்பான பீட்டாவின் தூதராக இருந்து வருகிறார். மேலும் ஆசியாவில் மனித-விலங்கு மோதலை குறைக்கும் நோக்கத்துடன் "தி எலிஃபன்டு ஃபாமிலி" திட்டத்தை ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.[2]
Remove ads
குடும்பம்
ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1992ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.
அழகிப் பட்டங்கள்
இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்[3]. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்[4]. இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
நடிப்பு
ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
தமிழில் நடித்த படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads