சர்கார் (2018 திரைப்படம்)
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்கார் (Sarkar) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சனவரி 2018 இல் தொடங்கப்பட்ட இத்திரைப்படமானது, தீபாவளி நாளான நவம்பர் 6, 2018 அன்று வெளியானது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் 2018, அக்டோபர் 19 அன்று மாலை வெளியானது.[2][3]
Remove ads
நடிகர்கள்
- விஜய் - சுந்தர் ராமசாமி
- வரலட்சுமி சரத்குமார் - கோமளவல்லி (பாப்பா)
- கீர்த்தி சுரேஷ் - நிலா
- ராதா ரவி - ரெண்டு
- பழ. கருப்பையா
- பிரேம் குமார்.[4]
- யோகி பாபு[5] - கௌஷிக்
தயாரிப்பு
சர்கார் திரைப்படத்தை சன் படங்கள் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.[6] இந்தப் படத்தின் தலைப்பானது சூன் 21, 2018 இல் வெளியானது.[7] அதற்கு முன்பு வரை தளபதி 62 எனும் பெயரிலேயே படப்பிடிப்பானது நடந்து வந்தது. கீர்த்தி சுரேஷ் முக்கியப் பெண் கதாப்பத்திரத்திலும் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், டி, சந்தானம் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் ஆனார்கள்.[6][8] ஜெயமோகன் எழுத்தாளராகப் பணிபுரியும் இந்தத் திரைப்படமானது சனவரி, 2018 இல் துவங்கியது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் நடத்தினர்.[4][9][10][11]
Remove ads
இசை
பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் செய்திருந்தார்.[8]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads