ஏ. கே. சி. நடராஜன்

தமிழ்நாட்டினைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia

ஏ. கே. சி. நடராஜன்
Remove ads

ஏ. கே. சி. நடராஜன் (A. K. C. Natarajan) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஆவார்.

விரைவான உண்மைகள் ஏ. கே. சி. நடராஜன், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

தொழில் வாழ்க்கை

ஆலத்தூர் வெங்கடேசய்யரிடம் வாய்ப்பாட்டும், இலுப்பூர் பஞ்சமியின் சகோதரர் நடேசனிடம் நாதசுவரமும் நடராஜன் பயின்றார்.[1] நாதசுவரம், வாய்பாட்டு போன்றவற்றில் கச்சேரி செய்யும் நிலைக்கு வந்தார். அதன்பிறகு ஐரோப்பிய வாத்தியமான கிளாரினெட்டை நாதசுவரம் போன்று குழைவுடனும் சங்கதிகளுடனும் வாசித்து சாதகம் செய்யத் துவங்கினார். அதன்பிறகு கர்நாடக இசையை கிளாரினெட்டை கொண்டு வாசித்து இசை மேதையென பாராண்ணுதலைப் பெற்றார்.[2] கிளாரினெட்டை கொண்டு கர்நாடக சங்கீதத்தை வாசிக்க ஏதுவாக அந்தக் கருவியில் தவிர்க்க முடியாத சில விசைகளை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை நீக்கிவிட்டு நாதசுவரத்தைப் போல துளைகளில் விரலடியாகவும், ஊதுகிற உத்தியைக் கைவரப்பெற்று அதன் வழியாக அக்கருவியில் கர்நாடக இசை நுட்பங்களை கொண்டுவந்து வாசித்தார்.[3]

லலிதா-பத்மினி-ராகினி சகோதரிகளில், நடிகை லலிதாவின் திருமணம் சென்னையில் நடந்தது; அந்தத் திருமணத்தில் நடந்த ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் இசை நிகழ்ச்சி, திருமணத்திற்கு வந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]

Remove ads

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads