ஐரிய மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐரிய மொழி (ஆங்கிலம்:Irish language) என்பது அயர்லாந்து நாட்டிலுள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். அயர்லாந்தில் மட்டும் 1.77 மில்லியன் மக்களுக்கு, இம்மொழி தெரியும். இம்மொழியானது, அயர்லாந்து அரசாங்கத்தின் அரசாங்க மொழியாக இருக்கின்றது. அர்ஸ் என்பது பண்டைய பெயர் ஆகும். இது கெல்டிக் மொழிகளின் கோடெலிக் (Goidelic) உபகுடும்பத்தில் இருக்கும் மொழிகளில் ஒன்றாகும். பழைய ஐரிஷ் மொழியின் கையெழுத்துப் பிரதி எதுவும், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னால் கிடைக்கவில்லை. 4 ஆம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில், இம்மொழியின் சுவடுகள் கிடைத்துள்ளன. அக்கல்வெட்டு மொழியானது, கையெழுத்துப் பிரதியில் காணப்படும் மொழி உருவத்துக்கு முற்பட்ட உருவத்தைப் பெற்றுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் உண்டாகிய ஆங்கிலத்தின் செல்வாக்கு, நாளுக்குநாள் அதிகமாக வளர்ந்து வந்ததால், 1835-இல் 40 இலட்சமாக இருந்த ஐரிஷ் மொழி பேசுவோர் தொகை, 1911-இல் 5,80,000 ஆகக் குறைந்து விட்டது. ஆயினும் 1921-இல், ஐரிஷ் சுதந்திர நாடு தோன்றியதும், ஐரிஷ் மொழியே அரசாங்க மொழியாக ஆயிற்று. தற்போது இம்மொழியானது, அந்நாட்டுப் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது.
Remove ads
வளர்ச்சி
கிறித்தவ சமயமானது, அயர்லாந்து நாட்டுக்குக் கி. பி 5ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தது. அம்மத வருகைக்கு முன்னர், அந்த நாட்டு மொழியில், எழுதப்ப்ட்ட இலக்கியம் எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களிடையே, ஆகம் (Ogam) என்னும் ஓர் அரிச்சுவடி மட்டுமே காணப்பெற்றது. அந்த அரிச்சுவட்டில், மொத்தம் இருபது எழுத்துக்கள் மட்டுமே இருந்தன. அந்த எழுத்துக்களும், கல்வெட்டில் பொறிப்பதற்கு மட்டுமே பயன்படக் கூடியதாக இருந்தது. செயின்ட் பாட்ரிக்கும், பிற கிறிஸ்தவப் பாதிரிமாரும், 432-இல் அயர்லாந்து வந்து சேர்ந்தபின், ஐரிஷ் மக்கள் அவர்களிடமிருந்து, இலத்தீன் எழுத்துருக்களைக் கற்றுக்கொண்டு, அதைத் தங்கள் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டனர். ஆகவே, ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப் பெற்ற ,எந்த ஐரிஷ் இலக்கியமும் இப்பொழுது கிடைக்கவில்லை. ஏழாம் நூற்றைண்டுக்கு பின்னே தான், எழுந்த கவிதைகளும் கதைகளும் எழுத்துருவம் பெற்றன. ஆயினும், இந்த ஆதிகாலமே ஐரிஷ் இலக்கியத்தின் 'பொற்காலம்' என்று கருதப்படுகிறது.
Remove ads
இலக்கியம்
ஐரிஷ் இலக்கியம் என்பது இரண்டு பிரிவுகளைப் பெற்றுள்ளது. ஒன்று காலிக் மொழி என்னும், ஐரிஷ் மொழியில் எழுதப்பெற்றது. இதனை ஐரிஷ் இலக்கியம் என்று அழைப்பர். ஆங்கிலேயர் அயர்லாந்து நாட்டைக் கைப்பற்றியபின், ஐரிஷ் மக்கள் ஐரிஷ் பொருள்களை வைத்து, ஆங்கில மொழியில் இயற்றப் பட்டவை ஆகும். இதனை ஆங்கிலோ-ஐரிஷ் இலக்கியம் என்பர். அந்த இலக்கியத்தில் காண்பவற்றில் மிகச் சிறந்தவையாக செயின்ட், பாட்ரிக் போன்ற கிறிஸ்தவச் சான்றோர்களுடைய வரலாறுகளும், உணர்ச்சிக் கவிதைகளும், வீரர் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அந்தக் காலத்தில் கிறிஸ்தவ சமயம் செழித்தோங்கியபடியால், அயர்லாந்து நாட்டைச் 'சான்றோரும் புலவரும் நிறைந்த நாடு' என்று கூறுவதுண்டு. ஐரிஷ் மக்கள் சட்டம், வரலாறு முதலிய நினைவில் வைக்க வேண்டிய நூல்களைச் செய்யுள் (Verse) உருவத்தில் அமைத்தனர். பன்னிரண்டாண்டுகள் கல்விப் பயிற்சி பெற்ற, 'விலிட்' என்னும் தேசியப் புலவர்கள், வரலாற்றுச் செய்திகளைச் செய்யுளாக எழுதினர். பாணர் என்போர் தங்களை ஆதரித்தவர்களைப் பற்றிய புகழ்ச்சிக் கவிதைகளையும், அவர்களுடைய பகைவர்களைப் பற்றி எள்ளித்திருத்தும் இலக்கியங்களையும் (Satires) புனைந்தனர். இம்மொழியில் பெரிய இதிகாச நூல் எதுவும் காணப்பெறவில்லை. இயற்கைக் காட்சிகளை ஒவ்வொன்றாக வருணிக்காமல், இரண்டொரு பொருள்களை வருணித்துக் காட்சி முழுவதையும், மனக்கண்முன் நிற்குமாறு செய்துவிடுகின்ற கவிதகைள் இயற்றப் பட்டன. இது ஓர் அரிய திறமையாகும்" என்று கூனோமேயர் (Kuno Meyer) என்பவர் கூறுகிறார். இத்தகைய கவிதைகளை இயற்றியவர்கள், ஐரிஷ் சான்றோர்களும் சன்னியாசிகளுமாவர். ஆனால், எந்த காவியத்திலும்,அதனை இயற்றியவர் பெயர்கள் பொறிக்கப்படாமலேயே உள்ளன. மதத் தொடர்பில்லாத கவிதைகளைப் பாணர்கள் இயற்றினர். அவர்களுடைய பெயர்களை, அவர்களது கவிதைகளில் அறிய முடிகிறது. அவர்கள் சமூகத்தில் அளவற்ற செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் கிறித்தவ சன்னியாசிகளுக்கும், ஆசான்களாகக் கூட இருந்தனர். அவர்களை மக்கள் நன்றாக ஆதரித்தபடியினாலேயே, பின்னால் வந்த, ஆங்கில அரசாங்கம் அவர்களைக் கொடிய அடக்குமுறைக்கு ஆளாக்கி வந்தது. பாணர் கவிதைகளில் மிகச் சிறந்தவை என, 1651-இல் கின்ஸேல் போர்க்களத்தில் தோல்வியடைந்து,[4] அயர்லாந்து அடிமையானதைப் பற்றிய வருத்தத்தையும் கோபத்தையும் வெளியிடும் கவிதைகள் எனலாம்.
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads