ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவி
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவி (Eurasian reed warbler) அல்லது நாணல் கதிர்க்குருவி (Acrocephalus scirpaceus) உலகத்திலேயே பழமையான கதிர்க்குருவி ஆகும். இது அக்ரோசெபலஸ் போினத்தில் உள்ளது. இவ்வினங்கள் ஐரோப்பா கண்டம் முதல் வெப்ப மண்டல பகுதியான மேற்கு ஆசியா வரை இப்பறவைகள் காணப்படுகின்றன.
Remove ads
பெயர்க் காரணம்
இவை குளிர்காலத்தில் ஆப்பிாிக்காவின் துணை சகாரா பகுதிக்கு இடம் பெயர்கின்றன. அக்ரோசெபலஸ் என்பது போினப் பெயர், இது பழமையான கிரேக்க மொழிச் சொல், 'அக்ரோஸ்' வில் இருந்து வந்தது, இதற்கு உயரமான தலை என்று பொருள். நியுமேன் மற்றும் நியுமேன் என்பவர் 'அக்ரோஸ்' என்றால் 'கூர்மையான முனை' என்கிறார். 'சிர்பாசியஸ்' என்பது லத்தின் மொழிச் சொல் இதன் பொருள் 'நாணல்' ஆகும்.[1]
வாழ்வு
மரத்தில் வாழக்கூடிய சிறிய இன இப்பறவைகள் பொதுவாக நாணல் படுகைகளிலும், புதர்களிலுமே காணப்படுகிறது. நாணல்களுக்கு இடையே கூடை போன்ற கூட்டினுள் 3-5 முட்டைகளையிடுகின்றன. 10 அல்லது 11 நாட்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகின்றன. ஒரே வாழ்க்கைத் துணையுடன் வாழக்கூடிய சிற்றினத்தைச் சார்ந்தது.[2]
பிற குறிப்புகள்
- ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவியானது, பொிய நாணல் கதிர்க்குருவியை ஒத்திருக்கிறது. ஆனால், பொிய நாணல் கதிர்க்குருவியானது அளவில் பொிதாகவும் வலிமையான புருவமேலம் (supercilium) கொண்டதாகவும் உள்ளது. இவற்றின் கூட்டில் குயில் முட்டையிட்டுச் சென்றுவிடும். அதை அறியாது இது குயில் முட்டையை அடைகாத்து குயில் குஞ்சை உணவு ஊட்டி வளர்த்துவிடும். இதன் நடுத்தர அளவானது 12.5-14 செ.மீ நீளமுடையது.
- முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுகள் காணப்படுவதில்லை இது கருஞ்சிவப்பு வண்ணத்திலும், கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. தலையின் முன்பகுதி தட்டையாகவும், அலகு வலிமையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது.
- இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக பூச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் பழங்களையும் கூட உண்கின்றன. இதன் பாடல் மெதுவாகவும், நடுக்கத்துடன் கூடிய ஜிட், ஜிட், ஜிட், என்ற ஓசையுடன், அக்ரோசெபலன் மாதிாியே சீழ்க்கை ஒலி எழுப்பி, பல குரல் ஒலியும் (mimicry) செய்கிறது.
- நாணல் கதிர்க்குருவி சொடுக்கு.
- நாணல் கதிர்க்குருவி முட்டை
- Cuculus canorus canorus + Acrocephalus scirpaceus - Museum specimen
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads