ஐரோவாசியக் காட்டுமான்
பாலூட்டி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐரோவாசியக் காட்டுமான் (elk அல்லது moose, Alces alces) என்பது புதிய உலக மான் வகைகளில் ஒன்று. பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை ஓநாய், கரடிகள் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. மற்ற வகை மான்களைப் போல் இல்லாமல் மூஸ்கள் தனியாக வாழ்கின்றன, கூட்டமாக வாழ்வது இல்லை. இவை பொதுவாக மெதுவாக நகரக் கூடியவை, ஆனால் கோபப்படுத்தப்பட்டால் வேகமாகவும், மூர்க்கத்தனத்துடனும் நடந்து கொள்ளும்.
Remove ads
பண்புகள்
சுமாா் 7-8 அடி உயரமிருக்கும். ஆண்களுக்கு விரிந்த கொம்புகளுண்டு. இந்தக் கொம்புகள் சிலவற்றில் 6அடி அகலம்கூட உண்டு. உலகத்திலேயே மிகவும் பரந்த கொம்புள்ள பிராணி இது. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் இந்தக்கொம்புகள் உதிர்ந்து ஆறு மாதத்தில் மீண்டும் முளைத்துவிடும். இதன் கழுத்தடியில் மண் போன்ற ஒரு தோல் மடிப்பு தொங்கும். வெயில் காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகே வசிக்கும். இவை வெகுவேகமாக நடப்பது மட்டுமல்ல நன்றாக நீந்தவும் செய்யும். தழைகளே இவற்றின் உணவு. பாசிகளையும் நீர்செடிகளையும் உண்ணும். பின் கால்களால் நின்று கொண்டு 12-15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும். ஒரு வயதுவரை குட்டி தாயுடனேயே இருக்கும். இவற்றிற்கு காது மிகவும் கூர்மை. இவற்றிற்கு அதிகரோமம் இருப்பதால் குளிரை தாங்கும் திறன் உண்டு. ஆனால் திடீர் என குளிர் அதிகரித்தால் காய்ச்சல் வந்து விடும். இவற்றிற்கு மூளைக்கோளாறு, கண்வலி, வயிற்று வலி போன்ற நோய்கள் கூட வருவதாக கூறப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads