ஒண்டுராசு

From Wikipedia, the free encyclopedia

ஒண்டுராசு
Remove ads

ஒந்துராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (கேட்க); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒந்துராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒந்துராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒந்துராசு எனவும் அழைக்கப்பட்டது[8] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் ஒந்துராசு குடியரசுRepublic of HondurasRepública de Honduras, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

ஒந்துராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[9]

ஒந்துராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

Thumb
ஹொண்டுராஸ் வரைபடம்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads