ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23 ஆம் நாளிலிருந்து சூன் 27 வரை நடைபெற்றது. இதே காலப்பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு இவ்விணைய மாநாட்டை நடத்தியது.



Remove ads
மாநாட்டுப் பொருள்
இம்மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 இருக்கும். தமிழ் கணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவால்கள் குறித்து முழுமையாக ஆராயும் தொழில்நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் இருக்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்களும், ஆய்வறிஞர்களும், கணினி மற்றும் இணையத் திறனுடையவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
Remove ads
மாநாட்டுக் குழுக்கள்
தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழக அரசினால் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நிகழ்ச்சிக் குழு, பன்னாட்டுக் குழு என்கிற இரண்டு குழுக்களையும் அமைத்துள்ளன.
உள்ளூர் ஏற்பாட்டுக் குழு
தலைவர்
- பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் (தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்)
அமைப்பாளர்
- டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்
- டேவிதார், இஆப., (செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- கவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசு)
- முனைவர் ப. அர. நக்கீரன் (இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)
- மோகன் (தேசிய தகவல் மையம், இந்திய அரசு)
- டி.என்.சி. வெங்கடரங்கன் (துணைத் தலைவர், உத்தமம்)
- ஆண்டோ பீட்டர் (கணித் தமிழ்ச் சங்கம்)
- ஸ்வரன் லதா (இயக்குநர்,இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு)
- டாக்டர். சந்தோஷ் பாபு. இஆப.,(மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு அரசு)
நிகழ்ச்சிக் குழு
தலைவர்
- முனைவர். வாசு அரங்கநாதன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா
உறுப்பினர்கள்
- எஸ் மணியம், சிங்கப்பூர்
- முனைவர். ரா சிவகுமாரன் , NIE, சிங்கப்பூர்
- முனைவர். ந. தெய்வசுந்தரம் சென்னைப் பல்கலைக்கழகம், இந்தியா.
- முனைவர். முத்துக்குமார் ஆறுமுகம், குமரகுரு கல்லூரி, கோயம்புத்தூர்,இந்தியா.
- முனைவர். மா. கணேசன் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்தியா.
- முனைவர். அப்பாசாமி முருகையன், Ecole Pratique des Hautes Etudes,பிரான்சு.
- தவரூபன், இலங்கை.
- முகுந்த்ராஜ், - ஆஸ்திரேலியா
- சுபாஷிணி கனகசுந்தரம் - ஜெர்மனி.
பன்னாட்டுக் குழு
தலைவர்
- வா.மு.சே. கவிஅரசன், ஒகயோ,அமெரிக்கா.
உறுப்பினர்கள்
- முனைவர் நாக. கணேசன், டெக்சாஸ், அமெரிக்கா.
- சிவா பிள்ளை, இலண்டன், இங்கிலாந்து.
- இளந்தமிழன், மலேசியா
- கலைமணி, சிங்கப்பூர்.
- முனைவர் மறைமலை, சென்னை.
- முனைவர் இராம்.கி, சென்னை.
- முனைவர் பத்ரி சேஷாத்திரி,சென்னை.
- இனிய நேரு, சென்னை.
- தில்லைக் குமரன், கலிஃபோர்னியா, அமெரிக்கா.
Remove ads
நிகழ்ச்சி நிரல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads