உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
இன்பிட் மன்றம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களைக் கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக ஜூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2009-ஆம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.
Remove ads
கோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு
தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சூன் திங்கள் 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்; அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இங்குக் கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.
Remove ads
தமிழ் இணைய மாநாடுகள் பட்டியல்
இதுவரை 23 தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன.[3]
Remove ads
தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள்
தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ்ச் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துகள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 650 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன[4].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads