ஒரகடம்

From Wikipedia, the free encyclopedia

ஒரகடம்map
Remove ads

ஒரகடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றத்தை அடுத்துள்ள ஒரு வளர்ந்து வரும் பொருளாதார மண்டலம் ஆகும். திருப்பெரும்புதூருடன் இணைந்து தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஏறக்குறைய 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.[3]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், செங்கற்பட்டு- திருக்கழுகுன்றம் சாலையில் அமைந்துள்ளது ஒரகடம்.

ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில்

ஒரகடம் பகுதி பண்டைய காலத்தில் தொண்டை நாட்டைச் சேர்ந்த பகுதி. ஒரகடத்தின் பண்டைய பெயர் பராங்குசபுரம் என்பது. ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் எனும் 1200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீராமர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீரகுநந்தன் மூலவர் தாயாருடன் ஒரே சந்நிதியில் காட்சியளிப்பது அரிதான அமைப்பாகும். இத்திருக்கோயிலில் திருப்பணிகள் தற்போது (2014 ஆம் ஆண்டு) நடந்து வருகின்றன.இத்திருக்கோயிலைச் சுற்றி அக்ரஹாரம் கருடனின் இறக்கைகள் போன்ற அமைப்பில் அமைவதற்கு வேண்டிய நிலத்தை ஸ்ரீஅஹோபில மடத்தின் ஸ்ரீஷஷ்ட்ட பராங்குஸ யதீந்தர மஹாதேசிகன் தாமே அளந்து அளித்ததால் ’பராங்குசபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது. [4]

Remove ads

தொழிற்சாலைகள்

ஒரகடத்தில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா-சீமன்சு நெட்வொர்க் தொழிற்சாலை நிறுவப்பட்டு 99 வருட குத்தகைக்கு மிகவும் குறைக்கப்பட்ட தொகைக்கு நிலமும் பெற்று பெருந்தொகையை வரி ஏய்ப்பும் செய்தது ($413 மில்லியன்) நோக்கியா நிறுவனம்.[5][6][7]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads