ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம்

கேரளத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம்
Remove ads

ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம் (Ottapalam railway station, நிலைய குறியீடு: OTP[2]) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG–3 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[2] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் என்ற ஊரில் உள்ளது.[3]

விரைவான உண்மைகள் ஒற்றப்பாலம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

ஒற்றப்பாலம் நிலையம் 1904 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]

இப்பகுதியின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை, ஓற்றப்பாலத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மக்களைச் சித்தரிக்கும் பல சுவரோவியங்களுடன் இந்த நிலையம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாற்றம் கண்டது. சுவரோவியங்களை தேவா கிரியேசன்சின் ஓவியர்களான அம்பிலி தெக்கெடத், டி. எஸ். சானு ஆகியோர் உருவாக்கினர். நிலையத்தின் சுவரோவியங்களில் சி. சங்கரன் நாயர், வி. பி. மேனன், கே. ஆர். நாராயணன், செம்பை வைத்தியநாத பாகவதர், மணி மாதவ சாக்கியர், பி. குஞ்ஞிராமன் நாயர், குஞ்சன் நம்பியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளர். மேலும் வரிக்காசேரி மனா, பழைய ஒற்றப்பாலம் நீதிமன்ற கட்டடம், சின்னகத்தூர் பூரன் போன்ற உள்ளூரின் முதன்மையான திருவிழாக்கள் போன்றவற்றை சித்தரிக்கும் சுவரோவியங்கும,், கதகளி மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற கலை வடிவங்களின் சித்தரிப்புகளும் இடம்பெற்றன. மேலும் 1921 ஆம் ஆண்டு ஒற்றப்பாலத்தில் நடைபெற்ற கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முதல் மாநாட்டை சித்தரிக்கும் சுவரோவியமும் உள்ளது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads