ஒரு கடவுட் கொள்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இறையியலில், ஒரு கடவுட் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை (Monotheism) என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும். அவனே உலகைப் படைத்தவன். அவன்  அனைத்து வகையான சக்திகளும் உடையவன். உலகின் அனைத்து செயல்களிலும் தன் சக்தியைச் செலுத்துபவன்.[1][2][3] இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கையே ஓரிறைக் கொள்கையின் அடிப்படை வரையறையாகும்.[4][5][6][7] பல கடவுட் கொள்கையின் படி கடவுள் சார்ந்த பல்வேறு கடவுளரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஓரிறைக் கொள்கைப்படி இறைவன் ஒருவன்[8]

ஓரிறைக் கொள்கை ஓர் இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் குழு இறைக் கொள்கையின்படி ஒருவர் தான் ஓரிறைக் கொள்கைப்படி வாழ்ந்தாலும், உள்ளூர் தேவர்களையும், தேவதைகளையும் வணங்குபவர்களையும் ஏற்றுக்கொள்கிறது. இவர்கள் பல கடவுளரையும் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஓரு உள்ளூர் தேவர் அல்லது தேவதையை மட்டுமே வணங்குவர்.

பாபிஸம் (Bábism), பகாய் சமயம், கோதாயிஸம் (Cao Dai (Caodaiism)), செயோன்டாயிஸம் (Cheondoism (Cheondogyo)), கிறித்துவம், டேயிஸம் (Deism), எகன்கர் (Eckankar), இசுலாம், யூதம், மண்டேயிஸம் (Mandaeism), ராஸ்தஃபாரை (Rastafari), ரவிடாஸ்ஸியா மதம் (Ravidassia), ஸீகோ னோ லே (Seicho no Ie), சைவம், சாக்தம், சீக்கியம், தங்கரிஸம் (Tangrism), டென்ரிக்யோ (Tenriism), வைணவ சமயம், யசீதி மக்கள் இனம், மற்றும் சொராட்டிரிய நெறியினர் போன்ற பல்வேறு பாரம்பரிய மதங்கள் ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர். 

இருப்பினும் ஓரிறைக் கொள்கை காலத்திற்கு முன் அடெனியிஸம், பண்டைய சீன சமயம், யாஹ்விஸம் போன்றவை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தன[9]

Remove ads

சொற்பிறப்பியல்

ஒரு கடவுட் கொள்கை என்பது கிரேக்க மொழியில் μόνος (monos – "ஒரு") என்ற வார்த்தையிலிருந்து உருவானது[10] அதாவது "ஒன்று" மேலும் θεός (theos – "பரம்பொருள்")[11] அதாவது "கடவுள்".[12] ஆங்கில வார்த்தையானது ஹென்றி மோர் (1614–1687) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[13]

அறபுப்பாசையில் "தௌஹீத்" ُالتَوْحِيْد "ஒரிறை கொள்கை" எனப்படுகிறது.

மூலங்கள்

யில், யூதம்கிறிஸ்தவம்இசுலாம்  எனப்படும் ஆபிரகாமிய மதங்களில்  கடவுள் பற்றிய கருத்துருவுக்கு "ஒரு கடவுட் கொள்கை" எனும் கருத்துக்கு முதன்மை கொடுக்கும் போக்கு உள்ளது.[சான்று தேவை] 19ஆம் நூற்றாண்டில் உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் ஆன்ம வாதக் கொள்கையை அடுத்து பல கடவுட் கொள்கை அதனை அடுத்து ஒரு கடவுட் கொள்கை என்று வளர்ச்சியடையும் கூர்ப்புவழி வளர்ச்சியை சமய நெறியாளர்கள் உதறித்தள்ளினர். ஆனால் 1974ல் இக்கொள்கை குறைந்த அளவிலேயே காணப்பட்டது.[need quotation to verify] 1910ஆம்ஆண்டு ஆஸ்திரிய நாட்டு மானுடவியல் வல்லுந‌ர் வில்ஹெல்ம் ஸ்கிமிட் (Wilhelm Schmidt) என்பார் வழங்கிய கொள்கை உர்மோனோதீஸ்மஸ் (Urmonotheismusஎன்பதே முதலேற்பு அதிகார வரம்புடையதாகவும் தொடக்கநிலை  ஒரு கடவுட் கொள்கை என்பதாகவும் அறியப்படுகிறது.[14]

கிரேக்க ஒரு கடவுட் கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட, யூதம்கிறிஸ்தவம், மற்றும் இசுலாம் போன்ற சமயங்கள் பல கடவுட் கொள்கைக்கு எதிராக வளர்ந்து வந்தன என்பது மறுக்கப்படுகிறது. சில ஆசிரியர்கள் (கரன் ஆர்ம்ஸ்ட்ராங் Karen Armstrong போன்றவர்கள்) கருத்தமைவுகளின் அடிப்படையில் ஹீனோதீயிஸத்திலிருந்து, மோனோலாட்ரிஸம்  வழியாக ஒரு கடவுட் கொள்கையானது படிப்படியாக தொடர்ந்து வளர்ந்து வந்ததது என்று நம்புகின்றனர்.[15][யாரால்?]

வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில்  ஒரு கடவுட் கொள்கையானது உலகம் முழுவதும் பகுதியளவு பரவியிருந்ததாகவும் ஒரே தேவதையை அனைவரும் வணங்கியதாகவும் அகேநாதன் (Akhenaten) என்பவர் தன்னுடைய "அடெனின் சிறந்த இறைவாழ்த்து" (Great Hymn to the Aten) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தெற்கு ஆசியாவில் வேதகாலத்திலிருந்து ஒரு கடவுட் கொள்கையானது இரும்புக் காலத்தை நோக்கி மேற்கொண்ட நகர்வு அறியப்பட்டுள்ளது.[16]

இருக்கு வேதத்தில் குறிப்பாக பிரம்மத்தில்  ஒரு பொருண்மை வாதம்  இரும்புக் காலத்தை நோக்கி மேற்கொண்ட நகர்வு நசாடியா சுத்கா என்ற பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சொராட்டிரிய நெறி (இருமையியம் கொள்கையிலிருந்து மாறுபட்டுள்ளது) மற்றும் யூதம் ஆகியவை ஒரு கடவுட் கொள்கைக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலிய மோனோலாட்ரிசத்திலிருந்து ஜூதாயிக் மோனோதீயிசம் உருவானது நன்கு வெளிப்படுகிறது[17] ஓரிறைக் கொள்கையின் நன்னடத்தை நெறியானது உண்மையான நல்லதும் கெட்டதும் எவை என விளக்கும் யூதம் மற்றும் சொராட்டிரிய நெறி ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது. கிறிஸ்தவத்தில் 7ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தியல் அதன்உ பின் இசுலாம் மார்க்கத்தில் தவ்ஹீது போன்றவை ஓரிறைக் கொள்கையினை உச்சத்திற்குக் கொண்டு சென்றன

Remove ads

ஆபிரகாமிய சமயங்கள்

ஆபிரகாமிய சமயங்களைப் பின்பற்றுவோர்கள் ஓரிறைக் கொள்கையுடயவராய் இருக்கின்றனர். யூத மதமானதுகிறிஸ்தவ மதத்தை  ஓரிறைக் கொள்கையுடையோராய் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் இசுலாமியரை ஓரிறைக் கொள்கை உடையோராய் ஏற்கின்றனர்.[18] அதே போன்று தற்கால கிறிஸ்தவத்தில் இடம் பெற்றுள்ள திரித்துவம் என்பது இயேசு அறிவித்த மற்றும் விரித்துரைத்த கிறிஸ்தவத்திற்கு மாறுபட்டு இருப்பதாக முஸ்லிம்கள் வாதிடுகின்றனர்.[19] ஆனால் திரித்துவத்திற்கு விவிலியத்தில் பல்வேறு சான்றுகள் இருப்பதாக கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர்.[20]

யூதம்

Thumb
யாவே, எழுத்துவடிவம்

யூதம் என்பது உலகில் ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றாகும்.[21] யூத சமயப்படி இறைவன் ஒருவனே,[22] அவன் தனித்தவன், தற்சார்பானவன், பகுக்க முடியாதவன், உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மற்றும், பொருள்களின் பிறப்பு, இருப்பு, பயன்பாடு, இறப்பு ஆகியவற்றுக்குக் காரணமானவன். பிற சமயக் கடவுளர்கள் எவரும் நடப்பில் இல்லை; நடைமுறையில் இல்லாத தனி உருக்கள்.

அவர்களை நம்பி மக்கள் அவர்களிடம் உண்மையும், சக்தியையும் எதிர்நோக்கி வேண்டுகின்றனர் என்று பாபிலோனிய தல்மூத் கூறுகிறது.[23]

யூதக் குருசார் யூதம் கூறும் ஓரிறைக் கொள்கை வாக்கியம் இர்ண்டாம் மைமோனைட்ஸின் உண்மையின் 13 குறிக்கோள்களில் குறிக்கப்பட்டுள்ளது.

கிறித்துவத்தின் ஓரிறைக் கொள்கையை யூதமும் இசுலாமும் விலக்கி வைக்கின்றன. யூதத்தில் குறிப்பிடப்படாத ஓரிறைக் கொள்கைக்கு உட்படாத வழிபாட்டை ஷிடஃப் என்று குறிக்கிறது.

இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணமானவன். இது இணையான ஓன்றிலிருந்து பிரிந்த ஒன்றை குறிப்பதில்லை. ஓர் உயிரியைக் குறிப்பதில்லை (பல தனி உயிரிகளில் ஒரு பகுதியாக). பல்வேறு மூலங்களாலான ஒரு பொருளைக் குறிப்பதில்லை. முடிவிலா பிரிக்கமுடியாத ஒரு எளிய பொருளைக் குறிப்பதில்லை. கடவுள் தனித்தவன்.[24]

பண்டைய இசுரயேல்

8ஆம் நூற்றாண்டில் யாவே என்ற கடவுளின் வழிபாட்டுமுறை வழக்கத்தில் இருந்தது. அப்போது இசுரயேலில் சமயக் கோட்பாட்டு முறைகளுக்கு இடையே போட்டிகள் நிலவி வந்தன. யாவேயின் வழியினர் பால்கள் என்று அழைக்கப்பட்டனர். பழைய எபிரேய விவிலியத்தில் உள்ள ஓசியா மற்றும் நாகூம் ஆகிய நூல்களும் இந்த போட்டிகளுக்கு சான்றுகளாக இருக்கின்றன. இவற்றின் ஆசிரியர்கள் இசுரவேலில் மக்கள் மத்தியில் சமய எதிர்ப்பு கொள்கைகளைப் பரப்பி வந்தனர். பல கடவுட்கொள்கையைக் கைவிடவில்லை எனில் கடவுள் உளக்கொதிப்பு அடைவார் என்று அச்சமூட்டி வந்தனர். சில ஆசிரியர்கள் ஹீனோதீயிசம் அல்லது மோனோலாட்ரிசம் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு யூதம் உருவாகி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கற்பிதப்படி, இசுரவேல் அரசும், யூத அரசும், யாவே எனும் கடவுளின் வழிபாட்டுமுறையைப் பழக்கத்தில் வைத்திருந்தனர். யாவே கடவுளை தம் அரசாங்கக் கடவுளாகக் கொன்டிருந்தனர். மற்ற கடவுளர்கள் இருப்பதையும் ஏற்றுக்கொண்டனர். இக்கருதுகோள்படி பாபிலோனிடம் யூதர்கள் தோல்வி அடைய ஆரம்பித்தபோது சில மதபோதகர்களும், எழுத்தாளர்களும் நாடு கடத்தப்பட்டவர்களுக்கான நீதிமன்றத்தின் முன் குழுவாக திரண்டு யாவே மட்டுமே உலகின் ஒரே கடவுள் என்ற கருத்தை உருவாக்கினர்.

ஷேமா

ஷேமா இசுரவேல்

ஷேமா இசுரவேல் ("ஓ இசுரவேல் மக்களே கேளுங்கள்") தோரா வேதத்தின் ஒரு பகுதியின் முதலிரண்டு வார்த்தைகளை யூதர்கள்ள் தங்களுடய காலை மற்றும் மாலை வழிபாட்டு வார்தைகளாகக் கொன்டிருந்தனர். இவை யூதர்களின் ஒரு கடவுட் கொள்கைக்கான தொடக்கமாகும். "ஓ இசுரவேலர்களே கேளுங்கள். தேவனே நம் கடவுள். தேவன் ஒருவனே" என்று கூறினர் (எபிரேய மொழியில்: שְׁמַע יִשְׂרָאֵל ה' אֱלֹהֵינוּ ה' אֶחָד‎). இது டியூடிரோனோமி 6.4ல் Deuteronomy 6:4 குறிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் ஷேமா இசுரவேலை தங்கள் வழிபாட்டில் முக்கிய அங்கமாகக் கருதினர். இதை ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள் உச்சரிப்பதை தங்களின் சமயக் கட்டளையாகக் கொண்டனர். பாரம்பரியமாக இவ்வார்த்தைகளை யூதர்கள் தங்கள் இறுதி வார்த்தைகளாகக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இரவு படுக்கைக்குப் போகும்முன் இவ்வார்த்தைகளைக் கூற வேண்டும் எனக் கற்பிக்கின்றனர்.

Remove ads

கிறிஸ்தவம்

கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி[1] என மூவராகவும் இருப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் கடவுளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றனர். இதனால் இவர்களும் ஓருகடவுட் கொள்கை உடையவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த திரித்துவக் கோட்பாட்டை பெரும்பான்மையான கிறிஸ்தவப் பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன. விவிலியத்தில் திரித்துவம் என்ற பெயர் இடம்பெறவில்லை என்றாலும் தந்தை, மகன், தூய ஆவி ஆகியோரைப் பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

விண்ணுலகில் சான்று பகர்கிறவர்கள் மூவர். தந்தை, வார்த்தை, தூய ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். மண்ணுலகில் சான்று பகர்பவை மூன்று, ஆவி, உடல், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. (1 யோவான் 5:7-8)

இங்கு வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கின்றது. ஆவி என்பது திருமுழுக்கையும் உடல் மற்றும் இரத்தம் ஆகியவை நற்கருணையையும் குறிக்கின்றன.

Remove ads

இசுலாம்

இசுலாம்

இசுலாமில் இறைவன், தவ்ஹீத் மற்றும் ஹனிஃப்

  • அரேபிய எழுத்து வனப்புடைமையின்படி "அல்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே". இசுலாமிய கோட்பாட்டின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
    • அல்லாஹ் (இறைவன்) அனைத்தின் மீதும் சக்திவாய்ந்தவன் ஆணையிடுபவன்.
    • அனைத்தும் அறிந்தவன்.
    • அனைத்தையும் படைத்தவன்.
    • அனைத்திற்கும் ஆதாரமனவன்.
    • அகில உலகங்களின் நீதிபதி.
    • தனித்தவன் (தவ்ஹீது)
    • தனித்துவமானவன் (வாஹித்).
    • யாராலும் பெறப்படவும் இல்லை. யாரையும் பெற்றவனுமில்லை(அஹது)
    • எங்கும் நிறைந்தவன்
    • கருணை மிக்கவன்
    • அவனை யாராலும் பார்க்க முடியாது. ஆனால் அனைத்தின் மீதும் அவன் பார்வை இருக்கிறது
    • இறைவன் எல்லாவற்றையும் விட மேலானவன்
    • எல்லாவற்றையும் அறிந்தவன் என்று குர்ஆன் (6:103) கூறுகிறது.

இறைவன் ஒருவனே. அவனே கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் கடவுள் ஆவான் (29:46). கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகியவற்றின் பின்னணியில், பொ.ச. 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியம் வெளிப்பட்டது, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் கருப்பொருள்கள் ஜினோஸ்டிஸத்தை ஒத்துள்ளதால், முஹம்மது கடவுளிடமிருந்து ஒரு புதிய மதத்தை பெறவில்லை என்றும் இது ஆபிரகாம், மோசே, தாவீது, இயேசு மற்றும் பிற இறைத்தூதர்கள் பின்பற்றிய சமயமேதான் என்றும் கூறப்படுகிறது. கடவுளின் முந்தைய வசனங்கள் மற்றும் செய்திகள் காலத்தால் அழிக்கப்பட்டதாலும், சிதைந்து போனதாலும், டோரா, புதிய ஏற்பாடு போன்றவற்றில் உள்ள செய்திகளைச் சரிசெய்வதற்காகவும் குர்ஆன் முஹம்மதுவிற்கு அனுப்பப்பட்டதாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உலகத்தை நடத்தும் தனியன், தனித்தன்மையுடையவன், முழுமையானவன், உண்மையானவன், படைப்புகளுக்கு அப்பாற்பட்டவன், சுயாதீனமானவன் இறைவன் என்பதை குர்ஆன் வலியுறுத்துகிறது.

கடவுளின் படைப்புச் செயலில் நன்மை மற்றும் தீமை இரண்டும் உள்ளதால் இறைவன் இருநிலைத் தன்மை உடையவன் என்ற வாதங்களை குர்ஆன் நிராகரிக்கிறது. உலகம் முழுவதிலும் கடவுள் ஒருவரே. அனைத்து உறுதியான நற்குணங்கள் மற்றும் தீய பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பவன் இறைவனே. முஸ்லீம்களின் இறைநம்பிக்கை குறித்து தவ்ஹீது பின்வருமாறு கூறுகிறது: கடவுள் இருக்கிறான். முகமது அவானுடைய தூதர். மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் பிற இயற்கை அமைப்புகளை வணங்குவது மன்னிக்க முடியாத பாவம் ஆகும் என்று குர்ஆன் கூறுகிறது. இஸ்லாமிய போதனைகள் அனைத்தும் தஹ்ஹீத் கொள்கையின் அடிப்படையில் உள்ளன. யூதம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவை ஓரிறைக் கருத்தை பாரம்பரியமாக ஒப்புக்கொள்கின்றன. கிறிஸ்துவர்களின் ஓரிறைக் கருத்தை நிராகரிக்கின்றன. ஒரே கடவுளை வணங்காத பிற மதத்தினரை யூதர்கள் ஷிடுஃப் மதத்தினர் என்று குறிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசு (அரேபிய மொழியில் ஈசா)பற்றி நம்பிக்கை வைத்தாலும், அவர் கடவுளின் பிறக்காத குமாரனென்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. குர்ஆனில் முஹம்மதை விட அதிகமாக இயேசு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் கிறிஸ்தவ கோட்பாட்டின் திரித்துவத்தை குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை (4:171) இது ஆபிரகாம் சமயக் (2:135) கோட்பாட்டிலிருந்து மாறுபடுவதால் இதனை குர்ஆன் ஷிர்க் என்கிறது. இது கிறித்துவர்கள் மதிப்புக்கேடாகப் பேசுகிற இறைபழிப்பான செயலாக இஸ்லாமில் கருதப்படுகிறது (5:77).

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads